மேட்டூர் மேச்சேரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா வீரப்பன் கொடி மற்றும் ஆதரவாளர்களுடன் உள்ளே நுழைந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா வீரப்பன், மேச்சேரியில் அன்புமணி பிரச்சாரத்தின்போது உள்ளே நுழைய முயன்றதால் அவரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுரை வழங்கினார்கள். அப்பொழுது அங்கிருந்து போக மறுத்த வித்யா வீரப்பன் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அங்கிருந்து வெளியேறிய மறுத்த அவரை வெளியேற்ற முயன்ற போது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர் அழுதபடியே அங்கிருந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றினார்கள்.
அப்பொழுது வித்யா வீரப்பன் கூறுகையில், “நாங்கள் சிந்தாமணி ஒரு முதல் கோவிந்தபாடி வரை இருசக்கர வாகன பேரணி நடத்துவதற்காக முன்கூட்டியே அனுமதி பெற்றோம். ஆனால் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்பதற்காக எங்களை தடுத்து நிறுத்தினார்கள். நாங்கள் நீண்ட நேரமாக காத்திருந்த போதும் எங்களுக்கு அந்த வழியாக செல்வதற்கு அனுமதிக்கவில்லை. அதனால்தான் நான் அன்புமணி ராமதாஸிடம் சென்று இதைப்பற்றி கூறலாம் என்று சென்றேன். அவர் என்னை சிறுவயதிலிருந்து வளர்த்தினார்கள். அந்த உரிமையில் தான் நான் அவரிடம் இதைப் பற்றி கூறலாம் என்று சென்றேன். ஆனால், அவர் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டார். என்னை மட்டும் தான் அனைத்து இடங்களிலும் சோதனை செய்கிறார்கள். வேறு எந்த வேட்பாளர்களையும் சோதனை செய்வதில்லை. என்னை மட்டும்தான் இவர்கள் நிறுத்தி சோதனை செய்வது அசிங்கமாக இருக்கிறது” என்று கூறினார்.
போலீஸ் தரப்பில் கூறும் பொழுது, அவர் சரியான அனுமதி பெறவில்லை. அதனால் தான் தடுத்து நிறுத்தப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதன்காரணமாக அங்கிருந்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யாரணி வீரப்பன் கைது செய்யப்பட்டார். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவு வருகிறது.
