Mayiladuthurai Congress Candidate: நீண்ட இழுபறிக்குப் பின் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்! மயிலாடுதுறையில் யார் போட்டி?

Mayiladuthurai Congress Candidate: நீண்ட இழுபறிக்குப் பிறகு மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

Continues below advertisement

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி, மயிலாடுதுறை காங்கிரஸ்  வேட்பாளராக ஆர்.சுதா என்பவர் போட்டியிடுகிறார்.

Continues below advertisement

 நாடாளுமன்றத் தேர்தல்:

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன.

திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்கீழ் பாமக உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன. 

கூட்டணிக் கட்சிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டனர். வேட்பாளர்கள் மனுத் தாக்கலும் செய்து வருகின்றனர்.

எனினும் காங்கிரஸ் கட்சியில் மட்டும் வேட்பாளர்களை முழுமையாக அறிவிக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், முதல்கட்டமாக 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. தொடர்ந்து நேற்று திருநெல்வேலி தொகுதிக்கு ராபர்ட் ப்ரூஸ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஆர்.சுதா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

எதிர் வேட்பாளர்கள் யார் யார்?

மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக சார்பில் பாபு என்பவர் போட்டி இடுகிறார். அதேபோல பாஜக கூட்டணியில் மயிலாடுதுறை வேட்பாளராக பாமகவைச் சேர்ந்த ம.க.ஸ்டாலின் என்பவர் களம் காண்கிறார். 

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு

முன்னதாக நேற்று விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கு தாரகை கத்பர்ட் என்னும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் முக்கியமான 4 கட்சிகளிலும் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். 

இதையும் வாசிக்கலாம்: DMK vs AIADMK vs BJP vs NTK: மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் 4 முனைகளில் போட்டியிடும் 160 வேட்பாளர்கள் யார் யார்? இதோ முழு பட்டியல்!

Continues below advertisement
Sponsored Links by Taboola