மேலும் அறிய
மதுரைக்கு வந்தால் புரோட்டா, ஜிகர்தண்டா கிடைக்கும் என்கிறார். இதெல்லாம் ஒரு முதல்வர் பேசும் பேச்சா? சசிகலா கேள்வி !
சிறையில் வைத்தால் பயப்படும் ஆள் நான் கிடையாது. அதனால்தான் வந்ததை பார்த்துக் கொள்ளலாம் என்று நான் இருக்கிறேன்" என்றார்.

சசிகலா
Source : whatsapp
மதுரைக்கு வந்தால் புரோட்டா, ஜிகர்தண்டா கிடைக்கும் என்கிறார். இதெல்லாம் ஒரு முதல்வர் பேசும் பேச்சா? எனக்கே மனக் கஷ்டமாக இருந்தது. திமுகவுக்கு மக்களை ஏமாற்றும் எண்ணம் தான் இன்னும் உள்ளது. - சசிகலா.
வி.கே.சசிகலா பிரச்சாரம்
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் அஇபுதமமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சக்கரவர்த்திக்கு வாக்கு கேட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பிரசாரம் மேற்கொண்டு பேசுகையில்," தமிழ்நாட்டு மக்களை கசக்கி பிழியும் திமுக மன்னர் ஆட்சியை ஒழிக்கவும், துரோகிகளை வீழ்தவும் களம் காண்கிறோம். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை 50 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. இப்போதும் நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.
புரோட்டா, ஜிகர்தண்டா கிடைக்கும் என்கிறார்.
திமுக - வால் ஆட்சியை சரியாக நடத்த தெரியவில்லை என நான் முன்பு இருந்தே சொல்லி வருகிறேன். ஜெயலலிதா செயல்படுத்திய ஒரு திட்டத்தை கூட இவர்களால் செயல்படுத்த முடியவில்லை. மதுரைக்கு வந்தால் புரோட்டா, ஜிகர்தண்டா கிடைக்கும் என்கிறார். இதெல்லாம் ஒரு முதல்வர் பேசும் பேச்சா? எனக்கே மனக் கஷ்டமாக இருந்தது. திமுகவுக்கு மக்களை ஏமாற்றும் எண்ணம் தான் இன்னும் உள்ளது. திமுக தனியாக வராமல் கூட்டணியுடன் வந்துள்ளனர். அந்த கூட்டணியை காணாமல் போக வைக்க வேண்டும்.
மேயரை நியமிக்க முடியவில்லை
நம் ( அதிமுகவில்) கட்சியில் துரோகிகள் அதிகமாகிவிட்டார்கள். ஜெயலலிதா இருக்கும் போது அப்படி எல்லாம் இல்லை. மூன்று முறை முதல்வராக இருக்கிறார்கள், பிறகு வேறு கட்சிக்கு செல்கிறார்கள். அவர்களுக்கும் நம் புத்தியை புகுத்த வேண்டும். ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும் ஏழை எளிய மக்களை நன்றாக பார்த்துக் கொண்டார்கள் அதனால் தான் மக்கள் எல்லோரும் அவர்களுக்கு வாக்களித்தார்கள். அதனால் தான் நான் சும்மாவே இருப்பது கிடையாது. திமுக அரசாங்கத்தில் ஏதேனும் நடந்தால் உடனடியாக வரிந்து கட்டி வருகின்றேன். மதுரை மேயர் ஊழல் குற்றச்சாட்டில் ராஜினாமா செய்துள்ளார், மேயரை நியமிக்க முடியவில்லை. ஆனால் ஜிகர்தண்டா சாப்பிடுவதை பற்றி பேசுகிறார் முதல்வர். திமுக அரசாங்கத்தில் எந்தத் துறையாக இருந்தாலும் 3 அமைச்சர்கள் கையெழுத்திட்டல் போதும் எல்லாம் செயல்படுத்தி விடலாம் என்று உள்ளது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து ஒரு பக்கம் மக்களை பார்த்தேன். மறுபக்கம் எங்கள் கட்சியில் உள்ள தொண்டர்களை பார்த்தேன். பின் ஒரு முடிவுக்கு வந்து கட்சிக் கொடியை அறிமுகம் செய்தேன்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கடத்திச் சென்றுவிட்டார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக கையெழுத்திட்ட ஒரு இளைஞரை அதிமுக முன்னாள் அமைச்சர் கடத்திச் சென்றுவிட்டார். இதை செய்தது அதிமுக முன்னாள் அமைச்சர் இப்போது நடப்பது திமுக அரசாங்கம் எனவே நீங்கள் இரண்டு பேரும் ஒன்றாகி விட்டீர்களா? என் பிரசாரத்தை ரத்து செய்ய வேண்டும் என ஒரு வேலையை நடத்தியுள்ளார். 35 வருடமாக ஜெயலலிதாவுடன் இருந்துள்ளேன். உங்களின் ஆட்டத்துக்கு முடிவு கட்டத்தான் வந்துள்ளேன். எத்தனை பெரிய கூட்டணியாக இருந்தாலும் மக்கள் என்னோடு உள்ளார்கள். நான் இந்த சலசலத்துக்கு எல்லாம் பயப்படுபவள் கிடையாது. ஜெயலலிதாவும் நானும் எவ்வளவோ பார்த்து விட்டு தான் வந்துள்ளோம் . நீங்கள் எங்களை கொண்டு சென்று நான்கு வருடம் சிறையில் அடைத்தீர்கள். அப்படி எல்லாம் செய்தால் பயந்து போய் விடுவீர்கள் நினைத்தீர்களா? அதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் கிடையாது. அதனால்தான் வந்ததை பார்த்துக் கொள்ளலாம் என்று நான் இருக்கிறேன்" என்றார்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2026
தேர்தல் 2026
தேர்தல் 2026
தேர்தல் 2026
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion


















