தொடர் விடுமுறை- சிறப்பு ரயில்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதனையடுத்து பணி நிமித்தமாக சொந்த ஊரை விட்டு வெளியூர்களில் பல லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் வாக்களிக்க சொந்த ஊர் செல்ல நேற்று முதல் பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள். அந்த வகையில் தமிழக அரசு போக்குரவத்து கழகம் சார்பாக 11ஆயிரம் சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இதே போல தெற்கு ரயில்வே சார்பாகவும் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளு. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு ரயில்வே கோடைக்காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை கருதி சிறப்பு ஏற்பாடாக மூன்று ஒருவழி சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. 

Continues below advertisement

போதனூர்க்கு சிறப்பு ரயில்

சென்னை எழும்பூர் – போதனூர் இடையே இயக்கப்படும் (06179 எண் ) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில், ஏப்ரல் 22, 2026 அன்று இரவு 11.55 மணிக்கு சென்னை எக்மோரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு போதனூரை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது. இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், கட்டபாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் ஏசி, ஸ்லீப்பர் மற்றும் பொது வகுப்பு உட்பட மொத்தம் பல்வேறு வகை பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு ஏப்ரல் 22 காலை 8 மணிமுதல் தொடங்கப்பட்டுள்ளது. 

மதுரைக்கு மெமு ரயில்

சென்னை எழும்பூர் – மதுரை இடையே (06161 எண்) MEMU முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், (ஏப்ரல் 22) இன்று இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு மதுரையை அடையும் என கூறப்பட்டுள்ளது. இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் எனவும் இந்த சிறப்பு ரயிலில் 12 MEMU பெட்டிகள் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Continues below advertisement

முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்

அதேபோல், மதுரை – தாம்பரம் இடையே 06162 எண் MEMU சிறப்பு ரயில், ஏப்ரல் 23 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, அதே நாள் இரவு 11 மணிக்கு தாம்பரத்தை அடையும். இந்த ரயில் கோடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு போன்ற நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலும் 12 MEMU பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.