கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டார். 


மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள்  பரப்புரை மேற்கொள்வது, தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.


கோவை மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில், கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. கே.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள தேர்தல் வாக்குறுதிகளின் விவரம் கீழ் வருமாறு.


’100 வாக்குறுதிகள் 500 நாட்களில் நிறைவேற்றப்படும்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



  • கோவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் எம்.பி. அலுவலகங்கள் அமைக்கப்படும்.

  • கோவை விமான நிலையம் சர்வதேச முனையமாக தரம் உயர்த்தப்படும். 

  • கோவை மெட்ரொ திட்டம் விரைந்து முடிக்கப்படும்.

  • ஆனைமலை நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும். 

  • நொய்யல், கெளசிகா நதி புனரமைப்பு செய்யப்படும்.

  • 250 மக்கள் மருந்தகங்கள் உருவாக்கப்படும்.

  • கொங்கு மண்டலத்தில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.ஆய்ஷ்மான் பாரத் திட்ட பயனாளிகளுக்கு இம்மருத்துவனையில் இலவச சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  • 5 ஆண்டுகள் முடியும் போது சர்வதேச வரைபடத்தில் கோவை இருக்கும்.


இரயில் சேவை திட்டம்



  • கோயம்புத்தூர் சந்திப்பு, கோயம்புத்தூர் வடக்கு, பீளமேடு ரயில் நிலையம், இருகூர் ரயில் நிலையம், சிங்காநல்லூர் ரயில் நிலையம், போத்தனூர் ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் புறநகர் ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  • செட்டிப்பாளையம் முதல் கரூர் வரை பல்லடம், காங்கேயம், வெள்ளகோவில் வழியாக புதிய ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

  • கோவை - கன்னியாகுமரி கோவையிலிருந்து கொச்சி வழியே திருவனந்தபுரம் வரை புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.கோவையில் இருந்து ஆன்மிக தலங்களுக்கு 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.


ஃபிட்னஸ்


நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி, சைக்கிள் பயணம் ஆகியவற்றிற்கு பிரத்யேகமான நவீன பாதை வசதிகள் உருவாக்கப்படுவதோடு உயர் தரத்தில் யோகா, தியான பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும். 


விவசாயம்



  • விவசாய விளைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்கும் பொருட்டு குளிர்சாதன வசதியுடன் கூடிய விவசாய ஏற்றுமதி மையம் ஏற்படுத்தப்படும்.

  • இயற்கை உரத்தை அதிகளவில் உற்பத்தி செய்ய மத்திய அரசின் மானியம் வழங்கப்படும். 

  • கோழி ஆராய்ச்சி நிலையம் விரைவில் கட்டி முடிக்கப்படும். 

  • கோவையில் கால்நடை மருத்துவமனை அமைக்க மாநில அரசிடம் வலியுறுத்தப்படும். 


 கல்வி


தமிழ்நாட்டில் இரண்டாவது Indian Institute of Management கோயில் நிறுவப்படும்.


நான்கு நவோதயா பள்ளிகள் நிறுவப்படும். கோவையில் மேலும் இரு கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்கப்படும்.


வாக்குறுதிகள்



  •  மத்திய அரசின் உதவியுடன் கோவையில் தங்க நகை தயாரிப்பு பயிற்சி மையம் உள்ளடக்கிய ஆபரண தங்க நகை பட்டறை பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

  • மோட்டார் வாகன ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

  • பொதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த தேசிய போதைப்பொருள் தடுப்பு NCB -Narcotics Control Bureau அலுவலக கிளை கோவையில் நிறுவப்படும்.

  • தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

  • பள்ளபாளையம் முதல் பொங்கலூர் வரை உள்ள பகுதிகளுக்கு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படும். 

  • கேலோ இந்தியா திட்டம் மூலம் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். 

  • மக்களவை உறுப்பினரை தொடர்பு கொள்ள பிரத்யேக செயலி உருவாக்கப்படும். 

  • கடந்த 10 ஆண்டுகளில் கோவைக்கு மத்திய அரசு வழங்கிய திட்டங்கள் சிறப்பு தணிக்கை உட்படுத்தப்படும். 

  • கோவையில் National Investigation Agency கிளை அலுவலகம் அமைக்கப்படும்.