Election Results 2024 LIVE: புதிய மத்திய அமைச்சரவையை பங்கு போடும் நிதிஷ், சந்திரபாபு - நெருக்கடியில் பாஜக
Lok Sabha Election Results 2024 LIVE: மக்களவைத் தேர்தலில் எண்ணிக்கை தொடங்கியது முதல் தற்போது வரை , இந்திய அரசியலில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
அதிமுக ஒன்றுபட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்து இருந்தார். இந்நிலையில், அதிமுக குறித்து பேச ஓபிஎஸ்-க்கு தகுதியில்லை என, அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுக தலைவர்களை விமர்சித்த அண்ணாமலையிடம் கூட்டணி வைத்தவர் தன் ஓபிஎஸ் என சாடியுள்ளார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர்களுடன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மோடி தலைமயிலான அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக ஆலோசனை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜனாதிபதி ஜோசப் ஆர். பிடன், ஜூனியர், நரேந்திர மோடியுடன், இந்தியப் பொதுத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இரு தலைவர்களும் அமெரிக்கா-இந்தியா இடையேயான விரிவான மற்றும் உலகளாவிய உறவை ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்கள். மூலோபாய கூட்டாண்மை மற்றும் ஒரு இலவச, திறந்த மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அவர்களின் பகிரப்பட்ட பார்வையை முன்னேற்றுவதற்கு. இரு தலைவர்களும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் டெல்லிக்கு வரவிருக்கும் பயணம் குறித்து விவாதித்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒற்றுமையால் மீட்டெடுக்க அறைகூவல்”என குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு வரும் 8ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அதேநாளில் மோடியும் பிரதமராக பதவியேற்க உள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சந்திரபாபு நாயுடு தனது பதவியேற்பு விழாவை வரும் 12ம் தேதி க்கு ஒத்திவைத்துள்ளார் என கூறப்படுகிறது.
தேர்தல் முடிவானது, பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி என்றும், பாஜகவின் மக்கள் விரோத போக்கை எதிர்ப்போம் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
Election Results 2024 LIVE: இந்தியா கூட்டணியின் குரல் இந்தியாவின் குரல், மக்களின் குரல் என்பதை தேர்தல் தெளிவாக்கி உள்ளது என இந்தியா கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் நிறைவடைந்தது
ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்திய அணி கூட்டத்தில் ஜார்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன் பங்கேற்றுள்ளார்.
Election Results 2024 LIVE: NDA கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற NDA கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
டெல்லியில், இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் தொடங்கியது.
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இன்றே உரிமை கோருகிறது பாஜக கூட்டணி
அதிமுக கோட்டையில் பாஜக பெரியளவில் வாக்குகளை பெற்றுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில், மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகிய அரசியல் தலைவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
18-வது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து 17-வது அமைச்சரவைக் கலைக்க பரிந்துரையுடன் பிரதமர் மோடி ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவைச் சந்திக்க அவரது மாளிக்கைக்குச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. வரும் 8ம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், குடியரசுத் தலைவரை பிரதமர் சந்திக்கிறார்.
நடப்பு மத்திய அரசின் கடைசி அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு - நடப்பு அமைச்சரவை கலைப்பு மற்றும் புதிய ஆட்சியமைக்க உரிமை கோரல் போன்றவை தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.
ஒரே விமானத்தில் பயணித்தாலும் நிதிஷ்குமாருடன் அரசியல் பேசவில்லை என்று தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தமிழ்நாடு இல்லம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.
இந்தியா கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.
வரும் 8ம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் டெல்லி வந்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் டெல்லியில் தொடங்கியது.
ஒடிசாவில் தோல்வி அடைந்த காரணத்தால் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அந்த மாநில ஆளுநரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
"மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியை தமிழ்நாட்டு மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம். தமிழ்நாட்டின் குரலை நாடாளுமன்றத்தில் பேசவுள்ள எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள்! இந்தியாவை கூறுபோட நினைத்த பாஜகவிற்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். கூட்டணி ஆட்சியமைக்க மோடி நினைக்கிறார். ஆனால் அது ஒரு போதும் நடக்காது." என்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் ஆந்திர மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்தனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளேன் என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் ஆந்திர மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்தனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளேன் என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதலமைச்சராக பதவியேற்கயுள்ள சந்திரபாபு நாயுடு டெல்லி செல்லும்முன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில்.” தேர்தலில் வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி. அரசியலில் கூட்டணி முக்கியமல்ல. தேசத்தின் நலனும் மக்களின் நலனுமே முக்கியம்.” என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இன்று டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருப்பதால், டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்றார்.
திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 2 முறையாக வெற்றி பெற்றுள்ளார். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். கனிமொழி 5,18,816 வாக்குகள் மொத்தமாகப் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை விட, 3,75,975 வாக்குகள் அதிகம் பெற்று அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடுகின்றனர். அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எந்தத் தொகுதியையையும் வெல்வதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாக உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடுகின்றனர். அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எந்தத் தொகுதியையையும் வெல்லுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாக உள்ளது.
திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் 91,005 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நெல்லை காங்கிரஸில் கடுமையான உட்கட்சி மோதல் இருந்து வந்த நிலையில், அங்கு பாஜகவின் நயினார் நாகேந்திரனைத் தோற்கடித்து, காங்கிரஸ் வென்றுள்ளது.
மேற்குவங்கம் பகரம்பூர் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வெற்றி பெற்றுள்ளார்.
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி ஹாட்ரிக் வெற்றி அடைந்துள்ளார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட, 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் 3,88,615 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி முகத்தில் உள்ளார்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் ஆ.மணி 20396 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பெரம்பலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தார்.
மத்தியப் பிரதேசத்தின் பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி இந்தூர் தொகுதியில் மொத்தம் 12,26,751 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 10,08,077 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சஞ்சயைத் தோற்கடித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகளானது, தனிப்பெரும் கட்சி ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையால், இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 4389.73 புள்ளிகள் சரிந்து 72,079.05 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி 1,379.40 புள்ளிகள் சரிந்து 21, 884.50 புள்ளிகளாக உள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் உ.பி, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
மாலை 4.47 மணி நிலவரப்படி, பாஜக 295 தொகுதிகளில் முன்னிலையும், காங்கிரஸ் 230 தொகுதிகளில் முன்னிலையும் வகிக்கிறது.
ஆறாவது முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்கிறார் திமுக வேட்பாளர் ஆ.ராசா. நீலகிரி தொகுதியில் மூன்றாவது முறையாக அவரின் வெற்றி உறுதியாகி உள்ளது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இதனால் அவரின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை தொகுதியில் 10,83,243 ஓட்டுகள் பதிவான நிலையில், 15ஆவது சுற்று முடிவில் 8,93, 217 வாக்குகள் எண்ணப்பட்டன. மீதம் 1,90,026 ஓட்டுகள் மட்டுமே எண்ணப்பட வேண்டிய நிலையில் எண்ண வேண்டிய ஓட்டைவிடக் கூடுதலாக காங்கிரஸ் வேட்பாளர் சுதா 2,28,136 ஓட்டுகள் பெற்றார். இதை அடுத்து தனது வெற்றியை உறுதி செய்தார்.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 16 சுற்றுக்கள் முடிவடைந்த நிலையில், எண்ணப்பட வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கையை விட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் சு.வெங்கடேசனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
Background
நாட்டின் மாபெரும் ஜனநாயகப் பெருவிழா
மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் 1 தொகுதி என 40 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது. மற்ற 19 மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 102 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
தொடர்ந்து ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 ஆகிய தேதிகளிலும் அடுத்தடுத்த கட்டங்களில் தேர்தல் நடைபெற்றது. கடைசியாக ஜூன் 1ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
இதற்கான தேர்தல் முடிவுகள் இன்று (ஜூன் 4) வெளியாகின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிவாகை சூடுபவர்கள் யார் என்று காண இங்கே இணைந்திருங்கள்.
கடந்த கால வரலாறு சொல்வது என்ன?
2019 மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளைத் திமுக தன் வசமாக்கியது. அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன. இதில் தேனி தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.ரவீந்திரநாத் வெற்றிபெற்று, நாடாளுமன்றம் சென்றார்.
இந்தியா முழுவதிலும் பாஜகவின் என்டிஏ கூட்டணி தனிப் பெரும்பான்மை பெற்று, ஆட்சியைத் தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -