Lok Sabha Election Result 2024:  இந்திய தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் படைக்க உள்ளார்.


தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை:


விடிஷா மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அவர், 3 மணி நிலவரப்படி 9 லட்சத்து 48 ஆயிரத்து 739 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் பிரதாபானு ஷர்மா  2 லட்சத்து 47 ஆயிரத்து 643 வாக்குகளையும், பகுஜன் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த கிஷான் லால் 8 ஆயிரத்து 998 வாக்குகளையும் பெற்றுள்ளார். இதன் மூலம், 7 லட்சத்து ஓராயிரத்து 96 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். இதே நிலை தொடரும் பட்சத்தில், இந்திய தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற, வரலாற்று சிறப்புமிக்க பெருமையை சிவராஜ் சிங் சவுகான் பெறுவார். 






சிவராஜ் சிங் சவுகான் முதலிடம்


முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் குஜராத் மாநிலத்தின் நவசரி தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்டு சி.ஆர். பட்டீல் 6 லட்சத்து 89 ஆயிரத்து 668 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன்படி, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து இருந்தார். இந்த சூழலில் அந்த சாதனையை சிவராஜ் சிங் சவுகான் முறியடித்துள்ளார். இதனிடையே, 3 மணி நிலவரப்படி, உள்துறை அமைச்சரான அமித் ஷா 6.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட முன்னிலை வகிக்கிறார்.


3. அனில் பாசு:


கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தின் அரம்பாக் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட அனில் பாசு 5 லட்சத்து 92 ஆயிரத்து 502 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


4. நரேந்திர மோடி:


கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்ட நரேந்திர மோடி 5 லட்சத்து 70 ஆயிரத்து 128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


5. ராம் விலாஸ் பஸ்வான்


கடந்த 1989ம் ஆண்டு தேர்தலில் பீகார் மாநிலத்தின் ஹஜ்புர் தொகுதியில், ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட ராம் விலாஸ் பஸ்வான் 5 லட்சத்து 4 ஆயிரத்து 448 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


6. சி.எம். சாங்:


கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் நாகலாந்து மாநிலத்தின் நாகலாந்து தொகுதியில், நாகலாந்து மக்கள் முன்னணி கட்சி சார்பில் போட்டியிட்ட சி.எம். சாங் 4 லட்சத்து 83 ஆயிரத்து 21 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.