கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு ஆதரவாக கண்ணார சந்துவில் உள்ள அத்தார் ஜமாத் ஈத்கா பள்ளிவாசலில் இஸ்லாமியர்களிடம் வாக்குகள் சேகரித்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர்.


 


 




 


தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அரசியல் கட்சிகள் இரவு பகல் பாராமல் தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். 


 




 


கரூரில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தங்கவேலுவிற்கு ஆதரவாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கண்ணார சந்து வில் உள்ள அந்தார் ஜமாத் ஈத்கா பள்ளிவாசலில் ரம்ஜான் மாத வெள்ளிக்கிழமையான தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும் படி துண்டு பிரசுரங்களை வழங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


 


 




 


இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள், இஸ்லாமிய தோழர்கள் என பலர் கலந்து கொண்டனர்.