முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பலா பழம் உடம்புக்கு நல்லது, அவர் வந்தா ராம்நாடுக்கு நல்லது என, ஜான்பாண்டியன் பிரச்சாரம் செய்தார்.


ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியுடன் சுயேட்சையாக பலாப்பழச் சின்னத்தில் போட்டியிடுகிறார்.


அவருக்கு பலாப்பழ சின்னத்தில் வாக்குகள் கேட்டு ஜான்பாண்டியன் கமுதி அருகே உள்ள செங்கோட்டை பட்டி கிராமத்தில் பிரச்சாரம் செய்தார்.


அங்கு ஜான்பாண்டியன் பேசியதாவது: நானும் பன்னீர் செல்வமும் 30 ஆண்டு கால நண்பர்கள், பலா பழம் உடம்புக்கு நல்லது, அவர் (ஓ. பன்னீர்செல்வம்) வந்தா ராம்நாடுக்கு நல்லது, நான் தென்காசி தொகுதியில் ஜெயிக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் ஜெயிக்க வேண்டும், இன்று முதல் எப்போதும் பலாப்பழ ஞாபகத்தில் இருக்க வேண்டும். எலக்சன் முடிந்தவுடன் பலாப்பழத்தை அறுத்து சாப்பிட்டு விட வேண்டும் என்று கூறி பலாப்பழ சின்னத்திற்கு வாக்குகள் கேட்டார்.