மக்களவை தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும்..? தமிழ்நாட்டில் என்றைய தேதியில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதை பூர்த்தி செய்யும் விதமாக வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 


இந்தநிலையில், நேற்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மக்களவை தேர்தல் குறித்தும், தமிழ்நாட்டில் காலியாக சட்டமன்ற தொகுதி குறித்து பேசினார். தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் என்றும் தெரிவித்தார். 


இப்படியான சூழ்நிலையில், 18 வயது பூர்த்தி செய்தும் நீங்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு அப்ளை செய்யவில்லையா..? அதனை எப்படி ஆன்லைன் மூலமாக அப்ளை செய்யலாம் என்பதை குறித்து இங்கே பார்ப்போம். 




எப்படி அப்ளை செய்வது..? 


புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு அப்ளை செய்வதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளது. அதில் முதல் வழிமுறை WWW.Voters.eci.gov.in என்ற இணைய பக்கத்தில் சென்று அப்ளை செய்யலாம். 


அப்படி இல்லை என்றால் இரண்டாவது வழிமுறையாக voters help line app என்ற செயலி மூலம் அப்ளை செய்யலாம். இந்த இரண்டிலும் அப்ளை செய்து 7 முதல் 15 நாட்கள் அனுமதி கொடுத்துவிடுவார்கள். அதனை தொடர்ந்து, 30 நாட்களுக்குள் தபால் மூலம் உங்கள் வீட்டிற்கே வாக்காளர் அடையாள அட்டை வந்துவிடும். 




 மேலே குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்திற்கு சென்று, உள்ளே சென்றதும் sign-up கொடுக்க வேண்டும். அதில், கேட்கப்படும் டிடெயில்களை கொடுத்த பிறகு, உங்களுக்கு அக்கௌன்ட் ஓபனாகி விடும். அதன்பிறகு உங்கள பக்கத்தை Log in செய்து உங்கள் சரியான எண்ணை கொடுத்து OTP யுடன் உள்ளே செல்லும். 


இணைய பக்கத்திற்கு சென்றவுடன் New registration for general electors என்ற இடது பக்கம் உள்ள பக்கத்தை க்ளிக் செய்தவுடன் லோடு ஆகி உள்ளே செல்லவும். அதில் கேட்கப்பட்ட விவரங்களை குறிப்பிட்ட பின்பு, (4.5 cm - 3.5 cm)  அளவுள்ள உங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை அப்லோடு செய்ய வேண்டும். 




தொடர்ச்சியாக ஆதார் கார்டு, பிறந்த தேதி, அதற்காக ஏதேனும் ஒரு சான்றிதழ், அட்ரஸ் உள்ளிட்டவற்றை சரியாக கொடுக்கவும். கடைசியாக உங்களது குடும்பத்தில் உள்ள நபரின் பெயர் மற்றும் அவர்களது வாக்காளர் அடையாக அட்டை எண்ணை பதிவிடவும். கடைசியாக அனைத்தையும் கொடுத்து சப்மிட் கொடுத்தால் உங்களுக்கு இன்னும் கொஞ்ச நாளில் வாக்காளர் அடையாள அட்டை வந்துவிடும். இதேதான், voters help line app பக்கத்திலும் பதிவிட வேண்டும்.