நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூரில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.


 


 




 


நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூரில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 27 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். 28 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். 30 ஆம் தேதி வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் ஆகும். வாக்கு எண்ணிக்கை வருகின்ற ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. 


 


 




வேட்பாளர்கள்  தாக்கல் செய்ய வரும் போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்திலிருந்து சுமார் 100 மீட்டருக்குள் மூன்று வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார். தாக்கல் செய்ய வரும் வேட்பாளர் தங்களுடன் நான்கு நபர்களை மட்டுமே உடன் அழைத்து வர வேண்டும். ஒருவர் தொகுதிக்கு அதிகபட்சமாக நான்கு வேட்பு மனுக்களை மட்டுமே தாக்கல் தாக்கல் செய்யப்படுவார்கள்.


 


 




இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் நடைபெறுவதையொட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னேற்பாடுகள் பணி மற்றும்  பலத்த பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மணப்பாறை பகுதியை சேர்ந்த சுயேட்சஒ வேட்பாளர் நாகராஜ் ஒருவர் மட்டும் தாக்கல் செய்துள்ளார்.