Lok Sabha Election 2024 Dates LIVE: மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி! அரசு அலுவலகங்களில் போட்டோக்கள், பதாகைகள் நீக்கம்
Lok Sabha Election 2024 Dates LIVE Updates: மக்களவை தேர்தல் தேதி தொடர்பாக, தேர்தல் ஆணையர்களின் செய்தியாளர் சந்திப்பு குறித்து உடனடி விவரங்களை அறிய ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
தேர்தல் தேதிகளை யார் குறித்துக்கொடுத்தது என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை கட்சிகளே வெளியிடவேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வேட்புமனு மார்ச் மாதம் 20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படவுள்ளது. மார்ச் 30ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள். பிரச்சாரம் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 16ஆம் தேதி. ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும். ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19லும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும் நடைபெறுகின்றது. மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. 4ஆம் கட்டத் தேர்தல் மே 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஐந்தாம் கட்டத்தேர்தல் மே 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. 6ஆம் கட்டத்தேர்தல் மே 25ஆம் தேதியும் ஏழாம் கட்டத்தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் வேட்புமனு மார்ச் 20ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. மேலும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. தமிழ்நாடு முதல் கட்டமாகவே தேர்தலை எதிர்கொள்கின்றது. ஜூன் 4ஆம் தேதி நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு. தமிழ்நாட்டிற்கு முதல் கட்டத்தில் தேர்தல் நடத்த முடிவு, ஜூன் 4இல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது.
நாடுமுழுவதும் 26 சட்டமன்றங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் ராஜீவ்குமார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிக்கும் சம வாய்ப்பு கொடுக்கப்படும் என ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
சமூகவலைதளங்களில் அரசியல் கட்சிகள் கண்ணியத்துடன் நடந்துகொள்ளவேண்டும் என ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளையும் மாற்றுத்திறனாளிகளையும் பிரச்சாரத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுகின்றது என ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
மத ரீதியாகவோ தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தோ பிரச்சாரம் செய்யாதீங்க என ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
பாரபட்சமாகச் செயல்படும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவர். அண்மையில் நடந்துமுடிந்த 11 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் ரூ.3,400 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது என ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் செய்யலாம் ஆனால் போலி செய்திகளை பரப்பக்கூடாது என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை பாயும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 100 வயதைக் கடந்த 2.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர் என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
பணப்பரிவர்தனை குறித்து அமலாக்கத்துறையும், வருமானவரித்துறையும் தீவிரமாக கண்காணிக்கும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
ட்ரோன்கள் மூலம் மாநில எல்லைகள் கண்காணிக்கப்படுவதோடு நாடு முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு நடத்தப்படும் என ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்காக 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன; 1.5 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வன்முறை இன்றி தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
பண பலம், ஆள் பலம், வதந்திகள், விதிமீறல்கள் ஆகிய 4 சவால்கள் தேர்தல் ஆணையத்தின் முன் உள்ளன என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 10. 5 லட்சம் வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தகுதியானவர்களை தேர்வு செய்யுங்கள் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆண் வாக்காளர்கள் 49. 7 கோடி, பெண் வாக்காளர்கள் 47.1 கோடி ஆகியோர் இந்த மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்
ஏப்ரல் 1ஆம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்தால் அவர்களும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மூத்தகுடிமக்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 2024ம் ஆண்டில் மட்டும் 60 நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது. வன்முறை இல்லாமல் மிகவும் அமைதியாக தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் போலி செய்திகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார்.
82 லட்சத்திற்கும் மேற்பட்ட 85 வயதை நிரம்பியவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர் என ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
82 லட்சம் மாற்றுத்திறனாளிகள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 60 நாடுகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. உலகிற்கே இது தேர்தல் ஆண்டு என ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 1.82 கோடி வாக்காளர்கள் முதல்முறை வாக்களிக்கவுள்ளனர் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்காக 55 லட்சம் வாக்கு இயந்திரங்கள் பயனபடுத்தப்படவுள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத் திருவிழாவில் எங்களுடன் நீங்களும் கலந்து கொள்ளுங்கள் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஆண்டின் மிகவும் முக்கியமான செய்தியாளர் சந்திப்பு இதுதான் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவைப் பொதுத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும் தேர்தல் ஆணையத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் தயாராக உள்ளோம் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தல் எப்போது என்பதை இன்னும் சற்று நேரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவிக்கவுள்ளார். செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது.
மக்களவைத் தேர்தல் தேதியை அறிவிக்க தலைமைத் தேர்தல் ஆணையரும் துணை தேர்தல் ஆணையர்களும் தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வந்துவிட்டனர். இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் இந்த மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
ஒடிசா, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.
lok Sabha election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் இன்று பிற்பகல் 3 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அதில், தேர்தல் எப்போது தொடங்கி எப்போது முடியும், எத்தனை கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்பன போன்ற அறிவிப்புகள் வெளியிடப்படும். அதோடு, ஜுன் மாதத்தில் காலியாக உள்ள ஆந்திரா மற்றும் அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின், சட்டமன்றங்களுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம்.
Background
Lok Sabha Election 2024 Dates LIVE:
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், முதல் கட்டட்திலேயே தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு:
18வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில், பிற்பகல் 3 மணியளவில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தலைமையில், புதியதாக தேர்தல் ஆணையர்களாக பதவியேற்ற சுக்பிர் சிங் சந்து மற்றும் க்யானேஷ் குமார் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கின்றனர். இதில், எத்தனை கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும், வேட்புமனுதாக்கல், வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு தொடர்பான விவரங்கள் வெளியிடப்படும். அறிவிப்பு வெளியானதுமே தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும். நாடு முழுவதும் சுமார் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் உள்ள சட்டமன்றங்களின் பதவிக்காலமும் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதன் காரணமாக அவற்றிற்கான தேர்தலும் ஒரே அடியாக நடத்தப்படும் என கூறப்படுகிறது. தற்போதுள்ள 17வது நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம், வரும் ஜுன் 16ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதற்கு முன்னதாக புதிய மக்களவைக்கான தேர்தல் நடைபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் கட்சிகள் தீவிரம்:
பிரதமர் மோடி தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க, பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பல மாநிலங்களில் தனித்தும், பலவீனமாக உள்ள பகுதிகளில் மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் பாஜக போட்டியிட தயாராகி வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள அக்கட்சி, பல முன்னாள் முதலமைச்சர்களை நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்கியுள்ளது. மறுமுனையில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர்த்து, மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் சேர்ந்து தேர்தலை சந்திக்கின்றன. தமிழ்நாட்டிலும், திமுக தலைமையில் I.N.D.I.A. கூட்டணி தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால், ஒட்டுமொத்த தேர்தல் களமும், ஒருபுறம் பாஜக மறுபுறம் பாஜக எதிர்ப்புகட்சிகள் என பிரிந்துள்ளது.
முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முதற்கட்ட மக்களவை தேர்தலிலேயே, 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகளுடனான ஆலோசனையின் போது, தமிழ்நாடு அரசியல் கட்சிகளும் ஏப்ரல் இரண்டாவது வாரத்திலேயே தேர்தல் நடத்த வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு, பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வந்து செல்வதும், இதையே உணர்த்துவதாக அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -