பாராளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில் வாக்களர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் இலவசமாக கொடுப்பதை தடுக்கும் விதத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் இருந்து ஏர்வாடி செல்லும் மெயின் ரோட்டில்  பறக்கும் படை அதிகாரி ஆதிநாராயணன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதில் சோதனை செய்தபோது அதில் ரூபாய் 2 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாய் இருப்பது பணம் இருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் காரில் வந்த பெண்ணான ஏர்வாடி 5ம் தெருவை சேர்ந்த சித்தீக் ஜெனிபா என தெரிய வந்தது. அதோடு உரிய ஆவணங்கள் இன்றி காரில் 2 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாயை கொண்டு வந்ததாக பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அப்பணத்தை பறக்கும் படை அதிகாரி ஆதிநாராயணன் பறிமுதல் செய்து நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாஸ்கரனிடம் ஒப்படைத்தார்.


அதே போல நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட இலங்குளம் கக்கன் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று  இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திசையன்விளையில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஒரு மூட்டையில் பாஜக சின்னம் பொறித்த தொப்பி, டீ சர்ட் பேனா, சேலை, பை உள்ளிட்ட பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனை அடுத்து அவற்றை பறிமுதல் செய்து நாங்குநேரி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது அந்த மூட்டையில் 44 டி-ஷர்ட் 100 தொப்பிகள், 100, சேலை 100 பேனா,  உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் அவற்றின் மதிப்பு சுமார் ரூ5800 என சொல்லப்படுகிறது.  இதனை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை உதவித் தேர்தல் தேர்தல் அலுவலர் பாக்கிய லட்சுமி முன்னிலையில் நாங்குநேரி தாசில்தார் பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர். நாங்குநேரி ஒன்றியத்தில் பாஜக நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தொண்டர்களுக்கு வினியோக்க வைத்திருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.