பாஜக கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் 


தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர். இந்த நிலையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய காட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில்  பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. கடந்தவாரம் காஞ்சி தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தற்போது திருவண்ணாமலை நகராட்சியில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக , பாமக , அமமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாம் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி வெற்றிகொள்வது குறித்து என பலர் கருத்துகளை தெரிவித்தனர்.




 


இன்னும் சுவர் விளம்பரம் செய்யவில்லை 


பின்னர் அதிமுக, திமுக, ஆகிய கட்சிகள் அனைத்து கிராமங்களிலும் உள்ள சுவர்களில் அந்தக்கட்சிகள் சின்னம் மற்றும் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதி வாக்கு சேகரித்து வருகின்றனர். ஆனால் நாம் இன்னும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் மட்டும் நடத்தி வருகின்றோம். இப்படி இருந்தால் வேட்பாளரை நாம் எப்படி அறிமுகப்படுத்த முடியும். முதலில் நாம் சுவர் விளம்பரம் எழுதுவதற்கான பணிகளை உடனடியாக துவங்க  வேண்டும். இந்தநிலையில் கலசப்பாக்கம் தொகுதியில் தனியார் மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேட்பாளர் சுவர் விளம்பரம் குறித்து பேசாமல் அறிமுக கூட்டத்தோடு முடித்துக்கொண்டு வேட்பாளர் அங்கு இருந்து சென்று விட்டார். இதனால் அதிமுக, திமுக காட்சிகள் அறிமுக கூட்டத்தை முடித்து விட்டு விறுவிறுப்பாக முன்னேறி சென்று கொண்டு இருக்கிறார்கள்.




பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் புலம்பல் 


ஆனால் பாஜக இதுவரையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி முழுவதும் இன்னும் முடியவில்லை. சுவர் விளம்பரமும் எழுதுவதற்கும் இன்னும் மும்மரம் காட்டவில்லை. பாஜக நிர்வாகிகள் பொதுமக்களிடம் சென்று ஓட்டு கேட்பதற்குள் தேர்தலே முடிந்துவிடும் போல என கூட்டணி கட்சியினர் புலம்பிக்கொண்டு உள்ளனர். மேலும் வேட்பாளர் அறிமுக கூட்டம் குறித்து எங்களுக்கு தகவல் அளிப்பதில்லை வேட்பாளரிடம் அமமுக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். அதற்கு வேட்பாளர் அவர்களிடம் ஆரம்பத்தில் இப்படித்தான்  இருக்கும் எல்லாம் போகப்போக சரியாகிவிடும் எனவும், முதலில் நீங்கள் சென்று நாம எப்படி வெற்றிபெறுவது என்று வழியை பாருங்கள்  எனவும், நாம் வெற்றி பெற்ற பிறகு  மனசங்கடங்களை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என சமாதான படுத்தி சென்றார்.