தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இரண்டு மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 34 பதவிகளுக்கு மட்டும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளதால், வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.



அதிமுகவில் நிலவும், ஒற்றை தலைமை விவகாரத்தால் எழுந்த உட்கட்சி பூசல் காரணமாக, வேட்புமனுவில் உள்ள Form A, Form B ஆகியவற்றில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாமல் உள்ளதால் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழல் ஏற்பட்டு சுயைச்சையாக போட்டியிட முடிவு செய்து அனைத்து பகுதியில் அதிமுக சுயேசையாக போட்டியிட்டு அதிமுக கூடிய பயன்படுத்தி சுழற்சி சின்னத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

இதனிடையே காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36 வது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டதால் பகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டதற்காக தேர்தல் அதிகாரி அறிவித்தனர். 



 

தற்போது காஞ்சிபுரம் மாநகராட்சியின் 36 வது வார்டில் மறைந்த ஜானகிராமனின் தந்தை வேணுகோபால் போட்டியிடுகிறார். இதில் அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் இரட்டை இலை சின்னம் ஒதுக்காத நிலையில் சுயைச்சையாக போட்டியிட்ட வேணுகோபால் இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் மகளிர் பணப்பை சின்னத்தில் போட்டியிடுகிறார்.   இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் ஆதரவாளர்களுடன் 36 வது வார்டு பகுதியில் முழுவதும் ஓ.பி.எஸ்.படம் இடம் இல்லாமலும் அதிமுக சின்னம் இரட்டை இலை இல்லாமலும், சின்னம் கிடைத்தாதால் அதிமுகவை சார்ந்த வேட்பாளர் சுயேட்சையோக மகளிர் பணப்பை சின்னத்தில் ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.



அப்போது அதிமுக நிர்வாகிகள் இரட்டை இலை சின்னம் இல்லை என்றாலும், சுயேச்சை சின்னத்தை மறந்து பழக்கத்தில் எப்போதும் செய்கையில் இரண்டு விரல்களை காண்பித்து இரட்டை இலை சின்னம் என ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தனர். கூட்டமாக பிரச்சாரத்திற்கு வந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திடீரென சில இடங்களில் வாக்குகளை கேட்டுவிட்டு காணாமலும் போய்விட்டனர். இதனைத் தொடர்ந்து வேட்பாளர், தனியாக சென்று வாக்குகளை சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.