சேலம், நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைத்த பின்னர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். திமுகவினர் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்த நிலையில் தற்போது நல்லது மட்டும் எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேவையில்லாமல் 3, 5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வு தேவையா? என்று கேள்வி எழுப்பினார். அறிஞர் அண்ணா போன்று ஏற்கனவே படிக்காமலே பலர் மேதைகளாக இருந்ததை நாம் பார்த்துள்ளோம். மதிப்பெண்ணை வைத்து அறிவை மதிப்பிடுவது சரியல்ல என்றார்.


கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது செய்த சாதனைகளை கூறமுடியாமல் மதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள். பள்ளிகளில் ஹிஜாப் அணிய கூடாது என்று கூறும் பாஜக அரசு சீக்கியர்களிடம் மத அடையாளத்துடன் பள்ளிக்கு வருவதற்கு தடை விதித்தால் இந்திராகாந்திக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும். ஜிஎஸ்டியால் எந்த நன்மை ஏற்பட்டது இதனால் மட்டும் நாடு வளர்ச்சி அடைந்ததால் போதது. உற்பத்தி வளர்ச்சி அடைந்தால் மட்டுமே நாடு முன்னேறும் எல்லாவற்றிலும் ஜிஎஸ்டி வரியால் எந்த பயனும் இல்லை.



தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருப்பதால் பொள்ளாச்சி மற்றும் கொடநாடு விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க முடியும் ஆனால் அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்காமல் அதைப்பற்றி பேசிக்கொண்டே அரசியல் செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக 7 பேர் விடுதலை பல அறிவுரைகள் கூறப்பட்ட நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் உங்களைப் பற்றி நினைப்பது கூட இல்லை என்று கூறினார். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 'கோபக் மோடி' என்றும் ஆட்சிக்கு வந்தவுடன் 'வெல்கம் மோடி' என்று திமுக கூறிவருகிறது.


ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பாஜக அரசு கூறிவரும் நிலையில் மேற்கு வங்கத்தில் மட்டும் 13 கட்ட தேர்தல் நடத்தப்பட்டது. இதே நிலை நீடித்தால் தெருவுக்கு ஒரு தேர்தல் நடத்தும் நிலை வந்துவிடும் அப்புறம் எப்படி ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த முடியும். திருப்பத்தூர் மற்றும் தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை மிரட்டி திமுகவினர் வாபஸ் பெற வைத்துவிட்டனர். இதன்மூலம் வெற்றி பெற்றதாக அறிவித்தது. இது வெற்றி அல்ல நேருக்கு நேர் மோதி வெற்றி பெற்றால் தான் ஜனநாயகம் வெற்றி, ஆனால் 8 மாத கால நல்லாட்சி நடத்துவதாகக் கூறிவிட்டு இது போன்று எதிர்க் கட்சி வேட்பாளர்களை வாபஸ் பெறச் செய்வது வெற்றியே அல்ல என்று சாடினார்.