மேலும் அறிய
Advertisement
Local Body Election | நாகையில் சக்கர நாற்காலியில் வந்து வாக்கு செலுத்திய 90 வயது மூதாட்டி
கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த 90 வயதான மூதாட்டி நாகரெத்தினம், கீழ்வேளூர் அஞ்சுவடடத்தம்மன் மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் சக்கர நாற்காலியில் வந்து தனது ஜனநாயக கடைகையை நிறைவேற்றினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாகை நகராட்சி, வேதாரண்யம் நகராட்சி, கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திட்டச்சேரி தலைஞாயிறு, உள்ளிட்ட பேரூராட்சிகளில் வாக்கு பதிவு இன்று தொடங்கியது. 188 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியது. நாகை 36 ஆவது வார்டில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி வாக்கு பதிவு மையத்தில் ஏராளமான மீனவர்கள் ஆர்வத்துடன் தங்களுடைய வாக்கினை பதிவு செய்தனர்.
தொடர்ந்து 36 வது வார்டில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இதேபோல் கீழ்வேளூர் பேரூராட்சியில் காலை 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் 90 வயதான மூதாட்டி தனது வாக்கினை பதிவு செய்தார். கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த 90 வயதான மூதாட்டி நாகரெத்தினம், கீழ்வேளூர் அஞ்சுவடடத்தம்மன் மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் சக்கர நாற்காலியில் வந்து தனது ஜனநாயக கடைகையை நிறைவேற்றினார்.
திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் காலை முதலே சாரல் மழையும் மிதமான மழையும் விட்டு விட்டு பெய்து வருவதால் வாக்குப்பதிவு மந்தமான நிலையில் உள்ளது இருந்தபோதும் வாக்காளர்கள் ஜனநாயக கடமையை ஆற்ற குடைபிடித்து ரெயின் கோட் அணிந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion