தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று முன் தினம் முடிவடைந்தது. இந்த நிலையில் வேட்புமனு பரிசீலனை நேற்று நடத்தி முடிக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி பேரூராட்சியில் 15 ஆவது வார்டு பகுதிக்கு 83 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 25 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. ஒருவர் வெற்றி . தற்போது 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.




புலியூர் பேரூராட்சியில் 15-வார்டு பகுதிக்கு 63 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 13 மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில் ஒருவர் வெற்றி. தற்போது புலியூர் பேரூராட்சியில் 49 நபர்கள் தேர்தலில் களம் காண்கின்றனர்.  கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி 15 வார்டுகள் கொண்ட பகுதியில் 71 வேட்பாளர்கள் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். ஒருவர் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 23 மனுக்கள் பெறப்பட்டன. தற்போது 47 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 



மருதூர் பேரூராட்சி 15-வார்டு பகுதிக்கு 108 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஒருவர் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 9 நபர்கள் தங்களது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டனர். தற்போது தேர்தல் களத்தில் 78 நபர்கள் உள்ளனர். நங்கவரம் பேரூராட்சியில் 18-வார்டு பகுதிக்கு 90 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.  ஒருவர் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,  34 நபர்கள் தங்களது வேட்பு மனுவை திரும்ப பெற்றுக் கொண்டனர். நங்கவரம் பேரூராட்சியில் 55 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.




பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி 15 வார்டு பகுதிக்கு 54 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 6 நபர்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2 நபர்கள் தங்களது மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். ஒருவர் வெற்றி . தற்போது பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் 45 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் 15-வார்டு பகுதிக்கு 66 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  29 நபர்கள் தங்களது வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்ட நிலையில், 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 




உப்பிடமங்களம் பேரூராட்சியில் 15-வார்டு பகுதிக்கும் 50 நபர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.19 நபர்கள் தங்களது வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். ஒருவர் வெற்றி. தற்போது தேர்தல் காலத்தில் 34 பேர்கள் உள்ளனர்.


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்


கரூர் நகர்புற ஊராட்சி மன்றத் தேர்தலில் மொத்த காலிப்பணியிடங்கள் 246. மொத்த வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் 1330. தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் 24. 363 நபர்கள் தங்களது வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளனர். கரூர் நகர்புற தேர்தலில் தற்போது வரை 5 வேட்பாளர்கள் வெற்றி . இந்நிலையில் கரூரில் 938 நபர்கள் களம் காண்கின்றனர்.