தீவிரமடையும் பிரச்சாரம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாளை தஞ்சாவூரில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
டெல்டாவில் திமுகவின் வெற்றி
இதனையடுத்து பிரச்சாரத் திடலில் நடந்து வரும் மேடை அமைக்கும் பணிகளை திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே என் நேரு நேரில் ஆய்வு செய்தார், இதனை தொடர்ந்து தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,சட்டமன்றத் தேர்தலையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தஞ்சாவூரில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்,
டெல்டா பகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அனைத்திலும் திமுக வெற்றி பெறும் என தெரிவித்த அவர், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் அனைத்து மக்களிடமும் சென்றடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். திமுகவிற்கான மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். தவெக தலைவர் விஜய் வாக்குகளை எங்கு பிரித்தாலும் திமுக உறுதியாக வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜக அதிமுகவுடன் மறைமுக தொடர்பு
எடப்பாடி பழனிச்சாமிக்கு பேசுவதற்கு ஒன்றும் இல்லாததால் வாய்க்கு வந்ததை பேசுவதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் தலைமை செயலாளரை பணியிடம் மாற்றம் குறித்து மம்தா பானர்ஜி தமிழ்நாட்டில் எந்த ஒரு பணி மாற்றமும் செய்யவில்லை என்பதற்காக பணி மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். தேர்தல் சமயத்தில் அதிகாரிகளை மாற்றுவது எந்த பிரச்சனையும் இல்லையென கூறினார். விஜய்க்கு- அதிமுக மற்றும் பாஜக உடன் மறைமுக தொடர்பு உள்ளவர்கள், பாஜகவுக்கு திமுக தான் எதிரி, தவெக-வுக்கும் திமுக தான் எதிரி, திமுகவை பற்றி பேசினால் மட்டுமே பத்திரிகைகளில் செய்தியாக வரும் என்பதற்காக பேசி வருவதாகவும் கே என் நேரு தெரிவித்தார்.
