கரூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்து, இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 8 லட்சத்து 45 ஆயிரத்து 164 வாக்காளர்கள் உள்ளனர். 26,492 வாக்காளர்கள் உயர்ந்துள்ளனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தங்கவேல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர் பணி நிறைவு பெற்ற பிறகு கடந்த வருடம் 12-ஆம் மாதம் சிறப்பு தீவிர திருத்தம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 79,690 பேர் நீக்கப்பட்டனர் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 8,18,672 ஆக இருந்தது அதன் பின்பு மீண்டும் பெயர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இன்று இறுதி வாக்காளர் பட்டியலை கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். கரூர் சட்டமன்ற தொகுதியில் 2,26,584 , அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1,94,505 , கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,02,087 , குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 2,21,988 என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 8,45,164 வாக்காளர்கள் உள்ளனர்.
குறிப்பாக நான்கு சட்டமன்ற தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர் பணிக்கு பிறகு 8,18,672 வாக்காளர்கள் இருந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்து 8,45,164 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 4,06,027 நபர்கள் பெண் வாக்காளர்கள் 43,9054 உள்ளனர்.
சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு வெளியிட்ட வாக்காளர் எண்ணிக்கை விட, இறுதி வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் 26,492 வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.