தமிழகம் முழுவதும் வருகிற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதியன்று  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

 



 

இந்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு  முதன் முறையாக மாநகராட்சி மேயர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமை வரலாற்றில் இடம்பிடிக்க திமுக, அதிமுக போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து பிரதான காட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 







 

அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் பெரும்பாலான வேட்பாளர்கள் பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் பெண் வேட்பாளர்கள் போட்டி போட்டு போட்டி போட்டுக்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஆண் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிடும் பாலாஜி கம்மாள தெரு, பவளவண்ண கோவில் மாட வீதி, புதிய ரயில்வே நிலையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 



 

அப்பொழுது செல்லும் வழியில் உள்ள பாஸ்ட் புட் கடைகள் சமையல் மாஸ்டர் ஆக மாறி சிக்கன் ரைஸ் போட்டுக் கொடுக்கும், இறைச்சிக் கடையில் சிக்கன் கறி வெட்டி கொடுத்தும், சாலை ஓர சிற்றுண்டியில் பரோட்டா சுட்டு கொடுத்தும் வாக்காளர்கள் இடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 




ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண