தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து திராவிடன் கழக தலைவர் கீ.மணியை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.


அப்பொழுது கி.வீரமணி பேசியதாவது:


திமுக சாதனையை மக்கள் அனுபவித்து வருகின்றனர். மோடி ஆட்சியின் வேதனை இந்தியா முழுவதும் இப்போழுது தான் தெரிய வந்துள்ளது. சாதனை செய்தவர்கள் வருகிறார்கள்‌. ஊழலை ஒழிப்பேன்‌ என்று சொன்னவர்கள், தேர்தல் பத்திரம் வாங்கியதன் மூலம் தெரியவந்துள்ளது. இதை மறைக்க நினைத்தார்கள். ஆனால் நீதிமன்றம் இப்பொழுது தான் காதை திருகியுள்ளது. தேர்தல் பத்திரம் என்றால் என்ன? என்று கேட்டுள்ளது. மிசா காலத்தில் ஸ்டாலின் அடிபட்டு கிடந்த போது தூக்கி பிடித்தது இந்த கை(என்னுடைய கை) தான். தேர்தல் நேரத்தில் யாரையும் கைது செய்ய கூடாது. 


கனடா நாட்டிலும் காலை உணவு திட்டம்


அமெரிக்கா, ஜெர்மன், ஐ.நா உள்பட தமிழ்நாட்டு முதல்வரை பாராட்டுகிறது. ஆனால் அதே நாடுகள் இந்தியாவில் மனித உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். அரசு பள்ளிகளுக்கு பிள்ளைகள் மகிழ்ச்சியாக சென்று, பிள்ளைகளோடு அமர்ந்து சாப்பிடுகிறார்கள். இப்பொழுது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள், தமிழ்நாட்டை பின்பற்றுகிறார்கள். குஜராத் மாடலில், திராவிட மாடலில் கொடுக்கும் உணவு கிடைக்கிறாதா என்று வடக்கு கேட்கிறவர்களை கேளுங்கள். இப்பொழுது கனடா நாட்டிலும், தமிழ்நாட்டை பார்த்து காலை உணவு கொடுக்கிறார்கள்.


எதற்கும் வராதா மோடி


வெள்ளம் வந்தபோது, மோடி வரவில்லை. மணிப்பூரில் பழங்குடி சமூக மக்களை ஆர்எஸ்எஸ் கும்பல், பெண்களை நிர்வாணப்படுத்தி, விரட்டினார்கள். இதைவிட வேறு ஏதேனும் கொடுமை உண்டா? இந்த மணிப்பூருக்கு மோடி போகவில்லை. தமிழ்நாட்டிற்கு அடிக்கடி மோடி வருகிறார். நான்கு நாட்கள் இல்லை, நானூறு நாட்கள் வந்தாலும், தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது. இது பெரியார் மண். இங்கு இவர்கள் பாட்சா பலிக்காது.


பொதுமக்களின் 21 ஆயிரம் கோடி அபேஸ் பண்ண மோடி 


தென் மாவட்டங்களில் 146 ஆண்டுக்கு பிறகு அடைமழை பெய்தது. பெருவெள்ளம் ஏற்பட்டது. அங்கு திமுக தான் நேரில் சென்று ஆய்வு செய்தது. ஆனால் மோடி வரவில்லை, நிவாரணம் தரவில்லை. தமிழ்நாட்டிற்கு நிதி ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. தேசிய பேரிடர் நிதியை கூட தரவில்லை. இந்த பாஜக அரசே, பேரிடர் ஆட்சி தான். இந்த பேரிடரை அகற்ற தான் ஏப்ரல் 19 தேர்தல். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.  பெண்களை நாடி சக்தி என இந்தியில் சொல்வார் மோடி. எல்லோரும் வங்கி கணக்கு தொடங்குங்கள், நான் ரூ‌.15 இலட்சம் பணம் போடுகிறேன் என்று சொன்னார். ஆனால் பெண்கள் சிறு சேமிப்பு பணத்தை வங்கி கணக்கை பெண்கள் தொடங்கினர். ஆனால் வங்கி கணக்கில் போதிய பண இருப்பு இல்லை என, வங்கியில் அபராதம் பிடித்துள்ளனர். இந்த அபராதம் மட்டும் ரூ.21,000 கோடி பணத்தை ஏமாற்றியுள்ளனர். ஆனால் பெண்களுக்கு 15 இலட்சம் வரவில்லை. ஆனால் பாஜகவினர் மோடி பணம் கொடுப்பதாக தெரிவிக்கவில்லை என செல்கின்றனர்.


மேலும் ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞருக்கு வேலை தருவதாக சொன்னார். இன்னும் தரவில்லை. தொலைக்காட்சியில் விளம்பரம் வருகிறது. அதில் மோடி கேரண்டீ என சொல்கிறார். இதுவரை போட்டது வேற டீ. ஆனா இப்பொழுது போடுவது கேரண்டீ. தமிழ்நாட்டிற்கு மோடி வந்தால், திமுக அழிப்பேன், காங்கிரஸை அழிப்பேன் என்று சொல்கிறார். இதுவரை எங்களை அழிப்பேன் என்று சொன்னவர்கள் தான் காணாமல் போனார்கள். 


சாதிய கூட்டணி


மோடி ஜாதியை வைத்து தான், கூட்டணி அமைத்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்னவர் ராமதாஸ். நானே போராடியதால் தான், இன்று இட ஒதுக்கீடு கிடைத்தது, இதை வரலாறு சொல்லும். இதுகுறித்து கோனேரி குப்பத்தில் பேசியதை முதல்வர் சொல்லியிருக்கிறார். நீங்கள் கூட்டணியில் தானே இருக்கிறீர்கள். மோடி அடிக்கடி வந்து செல்கிறாரே, நீங்கள் மோடியின் காதில் மெதுவாக சொல்லுங்கள். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று. அதை மோடி உடனே செய்துவிடுவார். நீட் தேர்வில் விலக்கு கேளுங்கள் பார்க்கலாம்‌ உடனே மோடி தருவாரா? . 


மத்திய அரசு நம்மிடம் வரி வசூல் செய்து, 29 பைசா கொடுக்கிறது. இந்த நிதி நெருக்கடியிலும், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் நிதியமைச்சர் இதனை பிச்சை காசு என சொல்கிறார். மகளிருக்கு கொடுக்கும் பணம் இலவசமில்லை, அது பெண்களுக்கான உரிமை என்று சொல்லப்படுகிறது. ஆதுதான் திராவிட மாடல் அரசு. சிஏஜி அறிக்கையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க கி.மீட்டருக்கு 18 கோடி தான். ஆனால் 280 கோடி என திட்டம் போடப்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.