M.P-ஆக தான் செய்த பணிகள் குறித்து புத்தகமாக, பெரம்பலூர் தொகுதி மக்களுக்கு வழங்கி உள்ளதாக, பெரம்பலூர் தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.


பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரனாரை பகுதியில் ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் ஆதரவு திரட்டினார். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் டாக்டர் பாரிவேந்தருக்கு மாலை அணிவித்து உற்சாக  வரவேற்பு அளித்தனர். அங்கு திரண்டு இருந்த பொதுமக்களிடம் பேசிய அவர், தான் M.P. நிதியினை தொகுதிக்காக முழுமையாகச் செலவு செய்ததாகக் குறிப்பிட்டார்.


நாடாளுமன்ற உறுப்பினராக தொகுதியில் செய்த பணிகள் குறித்து, தான் புத்தகமாக பொதுமக்களுக்கு வழங்கி உள்ளதாகக் கூறினார். 2019 தேர்தல் வாக்குறுதியின்படி ஆயிரத்து 200 மாணவர்களுக்கு  இலவச உயர் கல்வி திட்டத்தில் கல்வி வழங்கியதாகவும், அந்த திட்டம் தொடரும் என்றும் உறுதி அளித்தார். ஆயிரத்து 500 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச உயர் மருத்துவம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். இந்தியாவின் பெருமையை உலக நாடுகள் பேசுவதற்கு, மோடியின் ஆட்சித் திறமையே காரணம் என்று குறிப்பிட்டார். மூன்றாவது முறையாக மோடி ஆட்சி அமைக்க உள்ளதாகவும் டாக்டர் பாரிவேந்தர் நம்பிக்கை தெரிவித்தார்.


தொடர்ந்து சமத்துவபுரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு செய்த பணிகளை புத்தகமாக வெளியிட்டது தன்னைத் தவிர வேறு யாரும் இல்லை எனக் குறிப்பிட்டார். மோடி ஒரு தியாகி என்றும், நாட்டை காப்பாற்றுவதற்காக இரவு பகலாக உழைத்து கொண்டிருப்பதாகவும் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.


அதைத்தொடர்ந்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த டாக்டர்.பாரிவேந்தர், அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்களிடம் பெரம்பலூர் தொகுதிக்காக தாம் செய்த பணிகள் குறித்த புத்தகங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் யாரும் ஊழல் செய்யாதவர்கள் எனவும், தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள் ஊழல்வாதிகள் எனவும் கூறினார். ஊழல் கட்சிகளில் இருந்து எம்.பி-யை தேர்ந்தெடுத்தால் அது மிகப்பெரிய பாவம் என்றும் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்


தொடர்ந்து காமராஜர் வளைவு பகுதியில் பரப்புரை மேற்கொண்ட ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தருக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொகுதிக்காக செய்த பணிகள் குறித்து புத்தகம் வெளியிட நேர்மை வேண்டும் எனக்கூறிய பாரிவேந்தர், நல்லவர்களை தேர்ந்தெடுக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.


பெரம்பலூர் தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கல்வியை மேம்படுத்துதல், மேம்படுத்தப்பட்ட மருத்துவம் உள்ளிட்ட 12 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என, இந்திய ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் தனியார் விடுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், கூட்டணி கட்சியினர் முன்னிலையில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அரியலூர்- நாமக்கல் இடையே புதிய ரயில்பாதை திட்டம் நிறைவேற்றப்படும் எனவும், குருவாயூர் மற்றும் மங்களூர் விரைவு ரயில்கள் லால்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஐ.ஜே.கே. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விவசாயத் துறையை வலுப்படுத்த உலக வழிகாட்டு மையங்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. குளித்தலை நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றும், புள்ளம்பாடி மற்றும் லாலாபேட்டையில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் எனவும், வேந்தரின் இலவச உயர்கல்வி திட்டத்தின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆயிரத்து 200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.தொகுதிக்குட்பட்ட ஆயிரத்து 500 ஏழைக் குடும்பங்களுக்கு S.R.M. மருத்துவமனை மற்றும் மருத்துவ நிறுவனங்கள் மூலம், தலா ஒரு குடும்பத்திற்கு பத்து லட்சம் மதிப்பீட்டில் இலவச மருத்துவ சிகிச்சைக்கான இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல முக்கிய அம்சங்கள் இந்திய ஜனநாயகக் கட்சி  தேர்தல் வாக்குறுதியில் இடம் பிடித்துள்ளது. தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் I.J.K. தலைவர் ரவி பச்சமுத்து, I.J.K. பொதுச்செயலாளர் ஜெயசீலன், பா.ஜ.க. மாநில இணை பொதுச்செயலாளர் சிவசுப்ரமணியன், ஓ.பி.எஸ். அணி பொறுப்பாளர் R.T. இராமச்சந்திரன், பா.ம.க. மாவட்டச் செயலாளர் செந்தில் குமார், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் செல்வராஜ், த.மா.கா. மாவட்டத் தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன், மாநில விளம்பரப் பிரிவுச் செயலாளர் முத்தமிழ் செல்வன், மாவட்டத் தலைவர் A.V.R.ரகுபதி உள்ளிட்ட பலர் கொண்டனர்.


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக தன்னை தேர்ந்தெடுத்தால் மீண்டும் இலவச உயர் கல்வித் திட்டம் தொடரும் என டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.


மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர் ஒன்றியம் டி.களத்தூர் கிராமத்தில் அவர், தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைதொடர்ந்து பேசிய டாக்டர் பாரிவேந்தர், 2019-ல் அளித்த வாக்குறுதியின்படி, டி.களத்தூர் கிராமத்திலிருந்து மட்டும், சென்ற ஆண்டு17 மாணவர்கள் SRM பல்கலைக் கழகத்தில் பயின்று வருவதாகக் கூறினார். மேலும், தன்னை மீண்டும் எம்.பி.யாக தேர்ந்தெடுத்தால் இலவச உயர் கல்வித் திட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.


இதனையடுத்து அடைக்கம்பட்டி கிராமத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தருக்கு, தாமரை பூ மாலை அணிவித்து மக்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது, தமிழ்நாட்டில் உள்ள முதலமைச்சர் முதல், அமைச்சர்கள் வரை அனைவரும் ஊழல்வாதிகள் எனக் குற்றஞ்சாட்டினார். மேலும், காலம் காலமாக பொய் சொல்லும் தி.மு.க.வினருக்கு வாக்களிக்காதீர்கள் எனவும், குடும்ப ஆட்சி வந்தால் மக்கள் அடிமையாகிவிடுவார்கள் எனவும் தெரிவித்தார். 


இதனையடுத்து சிறு வயலூர் பகுதியில் டாக்டர் பாரிவேந்தர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது M.P. நிதி 17 கோடி ரூபாயை, தொகுதி மக்களின் தேவைகளுக்காக முழுமையாக செலவு செய்து உள்ளதாக கூறினார். மேலும், தான் நல்லவன் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டு, தங்கள் முன் மீண்டும் வாக்கு கேட்டு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.


தொடர்ந்து, குரூர் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட பாரிவேந்தருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், தங்களின் தேவைகள் குறித்தும், நாடாளுமன்றத்தில் தான் பேசியது குறித்தும், செய்த பணிகள் குறித்தும் புத்தகமாக வழங்கி உள்ளதாக கூறினார்.ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கி, ஏழை குடும்பத்தில் விளக்கேற்றி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு வரிப்பணத்தை சீனாவில் முதலீடு செய்யும் தி.மு.க. ஆட்சியை புறக்கணிக்குமாறும் வலியுறுத்தினார்.


இதனையடுத்து செட்டிகுளம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயக கூட்டணியினர் வாணவேடிக்கை முழங்க உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, தான் வெற்றி பெற்றால் செட்டிகுளம் சின்ன வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு பெற்று தருவதாக வாக்குறுதியளித்தார்.  மேலும், தான் செய்த பணிகள் குறித்து Progress Report போல மக்களுக்கு புத்தகமாக வழங்கி உள்ளதாகவும், ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து இலவச உயர் மருத்துவம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.


அதனைத்தொடர்ந்து நாட்டார் மங்கலம் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட பாரிவேந்தருக்கு இருசக்கர வாகனங்கள் புடைசூழ உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது பேசிய அவர், நாட்டார்மங்கலம் கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளதாகவும், M.P. நிதி 17 கோடி ரூபாயை முழுமையாக செலவு செய்துள்ளதாகவும் கூறினார். பிரதமர் மோடி வந்த பிறகுதான் நாடு பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், நாடு பொருளாதாரத்தில் வளர்ந்தால் அனைவரும் வளர்ச்சி பெறலாம் என்றும் தெரிவித்தார்.


இதையடுத்து நாரணமங்கலம் கிராமத்தில் டாக்டர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திரளான மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அதனை தொடர்ந்து ஆலத்தூர் கேட் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாரிவேந்தரிடம், இலவச உயர் கல்வி திட்டத்தில் பயின்ற மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.


அதனை தொடர்ந்து, நக்க சேலம் பகுதியில் டாக்டர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஏழைக்கு எழுத்தறிவிப்பது கோடி புண்ணியம் என்பதற்காகவே, ஆயிரத்து 200 மாணவர்களை தேர்ந்தெடுத்து பட்டதாரியாக்கியதாக கூறினார். ஊழல் செய்யாத, லஞ்சம் வாங்காத நல்லவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.