Haryana, J&K Election Result LIVE: 'முதல்வர் பதவி வழங்கப்பட்டால் வேண்டாம் என்று கூறமாட்டேன்' - பாஜகவின் அனில் விஜ்
Haryana, Jammu Kashmir Election Result 2024 Live: ஹரியானா மற்றும் ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை, தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய ஏபிபி நாடு செய்தி இணையதளத்துடன் இணைந்திருங்கள்.
ஹரியானா சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்,” ஹரியானா சட்டமன்றத் தேர்தக்ல் முடிவுகள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வெற்றி பறிக்கப்பட்டுள்ளது. தேர்தல், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளோம். நிர்வாகம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்பியதாகவே களநிலவரம் இருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளில் அதன் பிரதிபலிப்பு துளியும் இல்லை. இந்த முடிவுகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.இது தொடர்பாக ஆய்வு செய்வோம்.
“ வாக்கு எண்ணிக்கை, இ.வி.எம். மெசின் செயல்பாடு குறித்து புகார்கள் பெற்றுள்ளோம். அந்த தகவல்களைத் திரட்டி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்.” என்று தெரிவித்தார்.
ஹரியானா சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்,” ஹரியானா சட்டமன்றத் தேர்தக்ல் முடிவுகள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வெற்றி பறிக்கப்பட்டுள்ளது. தேர்தல், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளோம். நிர்வாகம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்பியதாகவே களநிலவரம் இருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளில் அதன் பிரதிபலிப்பு துளியும் இல்லை. இந்த முடிவுகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.இது தொடர்பாக ஆய்வு செய்வோம்.
“ வாக்கு எண்ணிக்கை, இ.வி.எம். மெசின் செயல்பாடு குறித்து புகார்கள் பெற்றுள்ளோம். அந்த தகவல்களைத் திரட்டி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்.” என்று தெரிவித்தார்.
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது. 48 இடங்களில் முன்னிலை வகிக்கும் பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் அனில் விஜ் தெரிவிக்கையில் தனக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டால் வேண்டாம் என்று கூறமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜூலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 5 ஆயிரத்து 909 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் யோகேஷ்குமாரை வீழ்த்தி வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வினேஷ் போகத்திற்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜம்மு பிராந்தியத்தில் மொத்தமுள்ள 43 தொகுதிகளில் 26 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது. காஷ்மீர் பிராந்தியத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக முன்னிலை பெறவில்லை.
Haryana, J&K Election Result LIVE: ஹரியானாவில் பாஜக 49 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 35 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது
Haryana, J&K Election Result LIVE: ஹரியானாவில் பாஜக 49 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 35 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது
Haryana Jammu & Kashmir Election Results LIVE:
ஹரியானாவில் பாஜக முன்னிலை.. தேர்தல் ஆணைய தளம் வழங்கும் நிலவரம்
ஆளும் பாஜக ஹரியானாவில் 48 இடங்களில் முன்னிலை வகிப்பதாகவும், காங்கிரஸ் 38 இடங்களில் முன்னிலை வகிப்பதாகவும் தேர்தல் ஆணையத் தளம் முடிவு நிலவரங்களை தெரிவித்துள்ளது
Haryana Assembly Election Results 2024 : சாவித்ரி ஜிண்டால் ஹிசார் தொகுதியில் முன்னிலை
Haryana Assembly Election Results 2024 : சுயேட்சையாக போட்டியிட்ட, இந்தியாவின் மிக பணக்காரப் பெண்ணான சாவித்ரி ஜிண்டால் ஹிசார் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். பாஜகவின் கமல் குப்தாவை எதிர்த்து அங்கு போட்டியிட்டார் சாவித்ரி ஜிண்டால்
Haryana, J&K Election Result LIVE: பட்காம், கந்தர்பால் ஆகிய இரு தொகுதிகளிலும் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா முன்னிலை வகித்து வருகிறார் என்று நிலவரங்கள் தெரிவிக்கின்றன
கொண்டாட்டங்களை தொடங்கிய காங்கிரஸ் தொண்டர்கள்
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளனர். ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருவதால், கட்சித் தொண்டர்கள் லட்டுகள், ஜிலேபிகள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்
Haryana Jammu & Kashmir Election Results LIVE: ஜம்மு & காஷ்மீரில் தற்போதைய நிலவரப்படி, 40-இல் காங்கிரஸ் முன்னிலை, 29 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது
Haryana Jammu & Kashmir Election Results LIVE: Haryana Jammu & Kashmir Election Results LIVE: ஹரியானாவில் தற்போதைய நிலவரம் : காங்கிரஸ் : 49 -இல் முன்னிலை பாஜக - 21 தொகுதிகளில் முன்னிலை என்னும் தகவல் வெளியாகியுள்ளது
Haryana Jammu & Kashmir Election Results LIVE: ஹரியானாவில் 20 தொகுதிகளில் பாஜக முன்னிலை. 47 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதாக தேர்தல் முடிவு நிலவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது
Haryana Jammu & Kashmir Election Results LIVE: ஹரியானாவில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜுலானா தொகுதியில் முன்னிலை
Haryana Jammu & Kashmir Election Results LIVE: ஹரியானாவில் பாஜக 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதாக தகவல்
Haryana Jammu & Kashmir Election Results LIVE: ஹரியானாவில் தேர்தலில் தபால் வாக்குகளில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது
Haryana Jammu & Kashmir Election Results LIVE : ஜம்மு காஷ்மீரில் கருத்துக்கணிப்பு முடிவுகள் பலிக்குமா?
ஜம்மு-காஷ்மீர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தேர்தலை சந்தித்துள்ளது. சில கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி அங்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல், தொங்கு சட்டசபை அமையும் இருக்கும் என்று கணித்திருந்தாலும், மற்ற கருத்துக்கணிப்புகள் இந்த தேர்தலில் காங்கிரஸ்-என்சி கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளன.
ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது, இன்றைய வாக்கு எண்ணிக்கையில், அக்கட்சி வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை அமைப்பதன் மூலம் புதிய வரலாறு படைக்க வாய்ப்பு உள்ளது.
முதல்வர் நயாப் சிங் சைனி, ஜாட் அல்லாதவர்களின் வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கும் வகையில் தேர்தல் அணிவகுப்பை நடத்தினார். பா.ஜ.க.வுக்கு எதிரான 10 ஆண்டுகால "எதிர்ப்பு ஆட்சியின்" அளவையும் இந்த முடிவு சுட்டிக்காட்டும். 2019 ஆம் ஆண்டில், அப்போதைய முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோரைத் தவிர, பாஜகவின் முழு அமைச்சர்கள் குழுவும் தேர்தலில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்க இன்னும் ஒரு மணி நேரமே உள்ள நிலையில், பல கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, அங்கு தொங்கு சட்டசபை இருக்கும் என்பதால், கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன.
அதன்படி தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா, அதன் அரசியல் போட்டியாளரான மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், அவரது மகன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் : முக்கியத்துவம்
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக சட்டசபை தேர்தல் நடைபெற்றுள்ளது. மாநில அந்தஸ்துக்கான புதுப்பிக்கப்பட்ட அழைப்புடன், இப்பகுதியில் பிஜேபியின் திட்டங்களை காங்கிரஸ் சீர்குலைக்கும் வகையில் இந்த தேர்தல்கள் மத்திய மற்றும் மாநில கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
கருத்துக் கணிப்புகளை நம்பினால், ஜம்மு பிராந்தியத்தில் பாஜக தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள தயாராக உள்ளது, அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கூட்டணி பெரும்பான்மையைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
Haryana Jammu & Kashmir Election Results LIVE : ஜம்மு பகுதியை குறிவைத்த பா.ஜ.க: வெற்றி கிடைக்குமா?
ஜம்மு பகுதியில் உள்ள 47 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்டு, பஹாரி இனத்தவர் மற்றும் பதரி பழங்குடியினரின் வாக்குகளைப் பெற்று சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.
யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒன்பது எஸ்டி இடஒதுக்கீடு இடங்களில் ஆறு ஜம்முவில் இருக்கிறது. எஸ்டி-ஒதுக்கீடு பகுதிகள் தவிர, புதிதாக உருவாக்கப்பட்ட பத்தர் சட்டமன்றத் தொகுதியிலும் பா.ஜ.க வெற்றியை எதிர்பார்க்கிறது.
Haryana Jammu & Kashmir Election Results LIVE: ஹரியானாவில் தேர்தலில் தபால் வாக்குகளில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன
Haryana Jammu & Kashmir Election Results LIVE : ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் அரைமணி நேரம் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளது
Haryana Election LIVE :
ஹரியானா தேர்தல் முடிவுகளை பரபரப்பாக அனைவரும் கவனித்து வரும் வேளையில், CSDS - Lokniti தேர்தல் கணிப்பாளர்கள் நடத்திய கணிப்பில், காங்கிரஸ் 42 சதவிகிதம் வாக்குகள் பெறும் எனவும், பாஜக 37 சதவிகித வாக்குகள் பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது
Background
Haryana, Jammu Kashmir Election Result 2024 Live: ஹரியானா மற்றும் ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணியளவில் தொடங்குகிறது.
ஹரியானா & ஜம்மு&காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்:
ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேநேரம் ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கு, கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால், அந்த மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில், ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைய உள்ளதாக குறிப்பிடுகின்றன. அதேநேரம், ஜம்மு &காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன.
கடந்த கால கருத்துக்கணிப்புகள்
உண்மையான முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே மக்களின் உணர்வைப் பிரதிபலிப்பதே தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளாகும். அவற்றின் துல்லியம் கடந்த காலங்களில் பலமுறை கேள்விக்குள்ளாகியுள்ளது. உதாரணமாக, 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மகத்தான வெற்றியைப் பெறும் என்று குறைந்தது 12 கருத்துக் கணிப்புகள் கணித்தன. உண்மையான முடிவுகள் வந்தபோது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெறும் 293 இடங்களை மட்டுமே பெற்றது. உண்மையில், 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டைப் போலல்லாமல், பாஜக தனிப்பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது.
2014 ஜம்மு &காஷ்மீர் தேர்தல் கருத்து கணிப்பு:
கடந்த 2014ல் நடந்த ஜம்மு காஷ்மீர் தேர்தலில், எக்ஸிட் போல் கணிப்புகள் உண்மையான முடிவுகளுக்கு அருகில் இருந்தன. 87 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பிடிபி 32-38 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக இருக்கும் என்றும், 44 இடங்கள் என்ற மேஜிக் குறியைத் தாண்டும் என்றும், பிஜேபி 27-33 என்ற இடத்தைப் பிடிக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் கணித்திருந்தன. தேசிய மாநாட்டு கட்சிக்கு 8-14 இடங்களும், காங்கிரசுக்கு 4-10 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டது. துல்லியம் நெருக்கமாக இருந்தது. இறுதியாக, பிடிபி 28 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், என்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீரில் 2024 சட்டமன்றத் தேர்தலில் NC மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடுகின்றன, அதே நேரத்தில் BJP மற்றும் PDP ஆகியவை ஜம்மு காஷ்மீரில் தனித்து போட்டியிடுகினறன.
2019 ஹரியானா சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு:
ஹரியானாவில் 2019 சட்டமன்றத் தேர்தலில், 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத்தில் பாஜகவிற்கு 60 இடங்களுக்கு மேல் இருக்கும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்பாளர்கள் கணித்தனர்.
ஆனால், தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்புகளை தவறாக்கின. உண்மையில், பாஜக 40 இடங்களை வென்றது, பெரும்பான்மைக்கு 6 இடங்கள் பின்தங்கியது, காங்கிரஸ் 31 இடங்களை வென்றது. 2024 மக்களவை தேர்தலிலும் கருத்துக் கணிப்புகளை மீறி காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி 235 இடங்களைக் கைப்பற்றியது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -