அ.தி.மு.க.வை தோற்கடிக்கும் விதமாக பணியாற்ற வேண்டும் - தொண்டர்களுக்கு கருணாஸ் உத்தரவு

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிக்கும் விதமாக முக்குலத்தோர் புலிப்படை பணியாற்ற வேண்டும் என்று கட்சியினருக்கு கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று வந்த நடிகர் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படையினருக்கு தொகுதிகள் ஒதுக்காததால் அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறினர். பின்னர், தி.மு.க., மக்கள் நீதிமய்யம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், எந்த கட்சியினருடனும் உடன்பாடு ஏற்படவில்லை.

Continues below advertisement



இதையடுத்து, கருணாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, தமிழக சட்டசபை தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை 234 தொகுதிகளிலும் போட்டியிடவில்லை. ஆனால், தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிக்கும் விதமாக கட்சியினர் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க.வை சந்தித்து நேரில் ஆதரவு தெரிவித்த கருணாஸ், பின்னர் தொகுதி ஒதுக்கீட்டிற்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்பதால் ஆதரவை வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola