Exit Poll Results 2026 LIVE: தமிழ்நாட்டில் தவெகவுக்கு 120 இடங்கள்; இந்தியா டுடே கருத்துக்கணிப்பு
Exit Poll Results 2026 LIVE Updates: தமிழ்நாடு, அசாம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் கருத்து கணிப்பு முடிவுகளின் அப்டேட்டுகளை காணலாம்.
க.சே.ரமணி பிரபா தேவிLast Updated: 29 Apr 2026 07:52 PM

Background
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே 5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகிறது. இன்று மாலை 6 மணிக்கு மேல் இந்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகவுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாடு, அசாம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டமன்ற...More
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே 5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகிறது. இன்று மாலை 6 மணிக்கு மேல் இந்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகவுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாடு, அசாம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் 9ம் தேதி அசாம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேசமயம் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாகவும் வாக்குப்பதிவு நடந்தது. ஏப்ரல் 29ம் தேதியான இன்று மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும், கேரளாவில் 140 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும், அசாமில் 126 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தவெகவுக்கு 120 இடங்கள்; இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தகவல்
தமிழ்நாட்டில் 98 முதல் 120 தொகுதிகள் வரை தவெக வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா - இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக 98- 110 இடங்கள் வரையிலும் அதிமுக 22 - 32 இடங்கள் வரை வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.