ABP-Cvoter Exit Poll Results 2021 Live: 2021 கேரளாவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது மார்க்சிஸ்ட்ABP- C Voter கருத்துக்கணிப்பு முடிவுகள்

Exit Poll Results 2021 Live Abp-Cvoter Exit Poll Result 2021 Election 2021 Abp-Cvoter Exit Poll: ABP நாடு வெளியிட்டுள்ள 2021 அசாம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 4 மாநிலத் தேர்தல் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இங்கே..

ABP NADU Last Updated: 29 Apr 2021 12:18 PM
அசாம் தேயிலைத் தோட்டங்களில் கருத்துக்கணிப்பு நிலவரம்

கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 28-30 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 6-8 இடங்களும் கிடைக்கும்.இதர கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.வாக்குச் சதவிகிதத்தைப் பொருத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி(48.2), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(42.5), இதர கட்சிகள்(9.5) சதவிகிதங்களாக இருக்கும்

வடக்கு அசாமில் கருத்துக்கணிப்பு நிலவரம் என்ன?

தேசிய ஜனநாயக கூட்டணி 2-4 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 0-2 இடங்களும் கிடைக்கும்.ஒருவேளை காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடையும் பட்சத்தில் இங்கு இதர கட்சிகளுக்கு இரண்டு இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.வாக்கு சதவிகிதம் பொருத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி(51.3), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(44.3), இதர கட்சிகள்(4.3) சதவிகிதங்களாக இருக்கும். 

அசாம் கீழ் பகுதியில் கருத்துக்கணிப்பு நிலவரம் சொல்வதென்ன?

 தேசிய ஜனநாயக கூட்டணி 9-11 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 21-23 இடங்களும் கிடைக்கும். இதர கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. தேசிய ஜனநாயக கூட்டணி(36.8), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(53.9), இதர கட்சிகள்(9.3) வாக்கு சதவிகிதங்களாக இருக்கும் 

அசாம் மலைப்பகுதியில் கருத்துக்கணிப்பு நிலவரம் என்ன?

 தேசிய ஜனநாயக கூட்டணி 4-5 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 0-1 இடமும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. வாக்கு சதவிகிதம் பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி(49.5), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(36.5), இதர கட்சிகள்(14.1) வாக்கு சதவிகிதங்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அசாம் கருத்துக்கணிப்புகள்: பராக் மண்டலத்தின் நிலை என்ன?

பராக் பகுதியில் மொத்தமுள்ள 15 தொகுதிகளில் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி(8),ஐக்கிய முற்போக்கு கூட்டணி(3), இதர கட்சிகள்(4) ஆகிய தொகுதிகள் வெற்றி பெற்று இருந்தன. இம்முறை கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி  தேசிய ஜனநாயக கூட்டணி 2-4 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 11-13 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. 

அசாம் கருத்துக்கணிப்புகள்: போடோலாந்து நிலை என்ன?

கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி  தேசிய ஜனநாயக கூட்டணி 9-11 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 7-9 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. 2016ம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி(15),ஐக்கிய முற்போக்கு கூட்டணி(2), இதர கட்சிகள்(1) ஆகிய தொகுதிகள் வெற்றி பெற்று இருந்தன. 

கேரளா கருத்துக்கணிப்புகள் : தெற்கு கேரளா நிலை என்ன?

வாக்கு சதவிகிதம்  எல்.டி.எஃப்(41.9), யுடிஎஃப்(40.6),தேசிய ஜனநாயக கூட்டணி(16.4), இதர கட்சிகள்(1.1) ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  எல்.டி.எஃப் கூட்டணிக்கு 21-23 இடங்களும், யு.டி.எஃப் கூட்டணிக்கு 15-17 இடங்கள் என்று மாறி உள்ளது. அதாவது தெற்கு கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு 10 இடங்களை வரை அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் ஆளும் எல்டிஎஃப் கூட்டணிக்கு இங்கு 10 இடங்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

கேரளா கருத்துக்கணிப்புகள்: வடக்கு கேரளத்தின் தொகுதி முன்னிலை விபரம்

 எல்.டி.எஃப் கூட்டணிக்கு 34-35 இடங்களும், யு.டி.எஃப் கூட்டணிக்கு 24-26 இடங்கள் என்று மாறி உள்ளது. அதாவது வடக்கு கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு 2 இடங்களை வரை அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் ஆளும் எல்டிஎஃப் கூட்டணிக்கு இங்கு 2 இடங்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

கேரளா கருத்துக்கணிப்புகள்: வடக்கு கேரளத்தின் வாக்கு சதவிகிதம்

2021-ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி இங்கு வாக்கு சதவிகிதம் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணிக்கு மட்டும் அதிகரித்து மற்ற கட்சிகளுக்கு குறைந்துள்ளது. அதன்படி இம்முறை வாக்கு சதவிகிதம்  எல்.டி.எஃப்(43.5), யுடிஎஃப்(42.7),தேசிய ஜனநாயக கூட்டணி(11), இதர கட்சிகள்(2.8) ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கேரளா கருத்துக்கணிப்புகள் : மத்திய கேரளாவில் தொகுதிகள் நிலை என்ன?

2016ல்  மொத்தமுள்ள 41 இடங்களில் எல்.டி.எஃப்(22), யு.டி.எஃப்(18), தேசிய ஜனநாயக கூட்டணி(0), இதர கட்சிகள்(1) ஆகிய இடங்களில் வென்று இருந்தன. 2021-ஆம் ஆண்டு இதுவே எல்.டி.எஃப் கூட்டணிக்கு 16-18 இடங்களும், யு.டி.எஃப் கூட்டணிக்கு 23-25 இடங்கள் என்று மாறி உள்ளது. அதாவது மத்திய கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு 5-6 இடங்களை வரை அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் ஆளும் எல்டிஎஃப் கூட்டணிக்கு இங்கு 5 இடங்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

கேரளா கருத்துக்கணிப்புகள் : மத்திய கேரளா நிலை என்ன?

2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மத்திய கேரளாவில் எல்.டி.எஃப்(41), யு.டி.எஃப்(39.9), தேசிய ஜனநாயக கூட்டணி(15.3), இதர கட்சிகள்(3.8) என்ற அளவில் வாக்குகள் பதிவாகி இருந்தன. 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி இங்கு வாக்கு சதவிகிதம் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணிக்கு மட்டும் அதிகரித்து மற்ற கட்சிகளுக்கு குறைந்துள்ளது. அதன்படி இம்முறை வாக்கு சதவிகிதம்  எல்.டி.எஃப்(40.9), யுடிஎஃப்(41.7),தேசிய ஜனநாயக கூட்டணி(15), இதர கட்சிகள்(2.4) ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி கருத்துக்கணிப்புகள்: மொத்த தொகுதிகளில் முன்னிலை விபரம்

ஒட்டுமொத்தமாக உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 6 முதல் 10 இடங்களில் வெற்றிபெறும் எனக் கணிக்கப்படுகிறது. ரங்கசாமி காங்கிரஸ் கூட்டணி, 19 முதல் 23 தொகுதிகளில் வெற்றிபெறும் எனக் கணிக்கப்படுகிறது. இதரகட்சிகள் 1 அல்லது 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும். தோராயமாக நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி 8 தொகுதிகளிலும் ரங்கசாமி காங்கிரஸ் கூட்டணி 21 தொகுதிகளிலும் வெற்றிபெறும் எனக் கணிக்கப்படுகிறது.

கேரளா கருத்துக்கணிப்புகள் : பாரதிய ஜனதா வாக்கு சதவிகிதம் என்ன?

பாஜக மற்றும் இதர கட்சிகளின் வாக்கு சதவிகிதம் இம்முறை குறையும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதன்படி பாஜக  2016 தேர்தலில் 14.9 சதவிகித வாக்குகளை பெற்று இருந்தது. எனினும் இந்தத் தேர்தலில் அது 13.7ஆக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 2016ஆம் ஆண்டு 2.8 சதவிகித வாக்குகளை பெற்று இருந்தன. இது 2021-ஆம் ஆண்டு தேர்தலில் 0.7 சதவிகிதம் குறைந்து 2.1-ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கேரளா கருத்துக்கணிப்புகள் : வாக்கு சதவிகிதம்

2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆளும் எல்.டி.எஃப் கூட்டணி 43.5 சதவிகிதம் பெற்று இருந்தது. 2021ஆம் ஆண்டு அது 0.7 சதவிகிதமாக குறைந்து 42.8 ஆக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல் காங்கிரஸ் கூட்டணி கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் 38.8 சதவிகிதம் வாக்குகளை பெற்று இருந்தது. அது 2021-ஆம் ஆண்டில் 2.6 சதவிகிதம் அதிகரித்து 41.4 சதவிகிதமாக இருக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அசாம் கருத்துக்கணிப்புகள் : வாக்கு சதவிகிதம்

2016-ஆம் ஆண்டு நடைபெற்றச் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி(41.9), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(31), இதர கட்சிகள்(27.1)  என்ற வாக்கு சதவிகிதம் பெற்று இருந்தது. அதுவே இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணி(42.9), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(48.8), இதர கட்சிகள்(8.3) வாக்கு சதவிகிதங்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி கருத்துக்கணிப்புகள்: வாக்கு சதவிகிதம் எவ்வளவு?

ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 34.2 சதவிகத வாக்குகள் பெறும். ரங்கசாமி காங்கிரஸ் கூட்டணி 47.1 சதவிகித வாக்குகள் பெறும். 2016 தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸின் வாக்கு வங்கியில் 5.3 சதவிகிம் சரிவு ஏற்பட்டுள்ளது. ரங்கசாமி காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு சதவிகிதம்  16.6 வரை உயர்ந்துள்ளது. 2016 தேர்தலில் ஒட்டுமொத்தமாக 30 சதவிகித வாக்குகள் பெற்ற இதரகட்சிகள் இந்த முறை 11.3 சதவிகிதம் வரைச் சரிவைச் சந்தித்துள்ளன.

புதுச்சேரி கருத்துக்கணிப்புகள்: பா.ஜ.க. -ரங்கசாமி காங்கிரஸ் - அதிமுக கூட்டணி முன்னிலை

 புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ABP மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி பெரும்பான்மையுடன் ரங்கசாமி காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. 

2021 கேரளா தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவின்படி ஆளும் எல்.டிஎஃப் கூட்டணிக்கு 71-77 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல காங்கிரஸ் கூட்டணிக்கு 62-68 இடங்கள் வரை கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர பாஜகவிற்கு வெறும் 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பதும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது

2016 தேர்தல்: கேரளா நிலை என்ன?

 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி (எல்.டி.எஃப்) 91 இடங்களில் வெற்றிப் பெற்று இருந்தது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான (யுடிஎஃப்) கூட்டணி 47 இடங்களில் வெற்றிப் பெற்று இருந்தது. பாஜக ஒரு இடத்தில் மட்டும் வென்று இருந்தது. 

கேரளாவில் மீண்டும் மார்க்சிஸ்ட் ஆட்சியா? : ABP- C Voter கருத்துக்கணிப்பு முடிவுகள்

ஏபிபி மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கேரளாவில் இம்முறையும் ஆளும் இடதுசாரிகளின் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. 

அசாம் : பா.ஜ.க. கூட்டணி எத்தனைத் தொகுதியில் முன்னிலை பெற வாய்ப்பு?

மொத்தமுள்ள 126 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி(74), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(39), இதர கட்சிகள்(13) இடங்களை பெற்று இருந்தன. இம்முறை கருத்துக் கணிப்புகளின் முடிவின்படி அது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 58-71 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 53-61 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.இதர கட்சிகளுக்கு 2 தொகுதிகள் கிடைக்கும்.

குறுகிய பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா ஆட்சி

2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகளோடு 2021 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒப்பிடும்போது இம்முறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கணிசமாக தொகுதிகள் அதிகரித்துள்ளது. எனினும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் குறுகிய பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன

அசாமில் மீண்டும் ஆட்சியமைக்குமா பாஜக?

ஏபிபி மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அசாம் மாநிலத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் குறைந்த வித்தியாசத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தெரியவந்துள்ளது.

மேற்கு வங்க இறுதிகட்ட வாக்குப்பதிவுகள்: 23 சதவிகித வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்

மேற்கு வங்கத்தில் 8வது மற்றும் இறுதி கட்டமாக இன்று தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 35 தொகுதிகளில் போட்டியிட்ட 283 வேட்பாளர்களில் 64 பேர்(23%) மீது கிரிமினல் வழக்குகளும் 50(18%) பேர் மீது மிகத் தீவிர கிரிமினல் வழக்குகளும் உள்ளன.

மேற்கு வங்க சட்டசபை : இறுதிகட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்தன

இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய இறுதிகட்ட வாக்குப்பதிவு மாலை 6:30 மணிக்கு முடிவுற்றது. மாலை 5:30 மணி நிலவரப்படி நான்கு மாவட்டங்களில் மொத்தமாக 76 சதவிகித வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க சட்டசபை : 2016ம் ஆண்டு யார்? யாருக்கு? எத்தனை இடங்கள்?

தென்னிந்தியாவில் தமிழகத்தைப் போல, கிழக்கு இந்தியாவில் பா.ஜ.க.விற்கு சவாலான மாநிலமாக விளங்குவது மேற்கு வங்கம். 1998-இல் திரிணாமுல் காங்கிரசை தொடங்கிய மம்தா பானர்ஜி தனது தீவிர பரப்புரையாலும், கள வியூகங்களாலும் மேற்கு வங்கத்தை அதுவரை ஆண்டுகொண்டிருந்த மார்க்சிஸ்டுகளிடம் இருந்து 2011-ஆம் ஆண்டு முதல்முறையாக கைப்பற்றினார். தனது சிறப்பான நிர்வாகத்திலும், மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையாலும் 2016-ஆம் ஆண்டு மீண்டும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.


அந்த தேர்தலில் மட்டும் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 184 இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 42 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. சி.பி.எம். கட்சி 40 இடங்களை கைப்பற்றியது. இந்திய கம்யூனிஸ்டு 2 இடங்களை கைப்பற்றியது.


 




அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சி 11 இடங்களையும், புரட்சிகர சோசியலிச கட்சி 7 இடங்களையும், சமாஜ்வாதி, டெமாக்ரடிக் சோசியலிஸ்ட் கட்சி தலா 1 இடங்களையும், கோர்கா ஜன்முக்தி மோர்சா 3 இடங்களையும், சோசியலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா(கம்யூனிஸ்டு) 1 இடத்தையும், சுயேட்சைகள் 2 இடத்திலும் வெற்றி பெற்றனர். பா.ஜ.க. வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.


2016 சட்டமன்ற தேர்தலில் 3 இடங்களில் கைப்பற்றிய பா.ஜ.க. இந்த 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸுக்கு கடும் போட்டியாக உருவெடுத்துள்ளது. 2016 முதல் 2021 வரையில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் தற்போது 15 இடங்களை பா.ஜ.க. தன் வசம் வைத்துள்ளது.


 




 


2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தைப் போலவே, மேற்கு வங்கத்திலும் பா.ஜ.க. மண்ணை கவ்வும் என்று அரசியல் வல்லுநர்கள் சிலர் கருதினர். ஆனால், அவர்களின் கணிப்பை பொய்யாக்கிய பா.ஜ.க. மொத்தமுள்ள 42 மக்களவை தொகுதிகளில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இது மம்தாவிற்கே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால், 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளை தன் வசம் வைத்திருந்தது.  2021 சட்டசபை தேர்தலில் எத்தனை கட்சிகள் எத்தனை இடத்தை பிடிக்கப்போகின்றன என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரியவரும்.

Background

இந்தியாவின் நூற்றாண்டு அனுபவம் கொண்ட ABP நிறுவனம், ‛சி வோட்டர்ஸ்’ உடன் இணைந்து  5 மாநிலங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட உள்ளது. இதில் அசாம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலத் தேர்தல் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இங்கே..

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.