நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகாட்சியில் இன்று தேர்தல் பரபரப்புரை தீவிரமாக இருந்தது. உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் உள்ளிட்டோர் மதுரையில் பரப்புரை மேற்கொண்டனர். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கிராம பஞ்சாயத்து மக்கள் நீதி மய்யம் கண்டுபிடித்தது அல்ல. 25 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் மக்களுக்கு தெரியாத விஷயத்தை மக்களுக்கு டார்ச் லைட் அடித்து காட்டியுள்ளது. மக்கள் அதிகாரம் அவர்களிடம் கொடுத்து விட்டால் வியாபாரம் கெட்டுவிடும் என்ற பயத்தினாலேயே அதை செய்யாமல் இருந்தனர்.





அடுத்ததாக நகர்ப்புற வார்டு சபைகளை அமைக்க வேண்டும் என்பதனையும் முதல் குரலாக வைத்துக் கொண்டிருக்கிறோம். குடிநீர் என்பது அத்தியாவசியம் இன்னும் 25 ஆண்டுகள் கடந்தால் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆகிவிடும். ஆனால் இன்னும் குடிநீர் முழுமையாக கிடைக்கவில்லை. எது இலவசமாக கிடைக்கிறதோ அதை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். இங்கு இலவசமாக ஓடுவது சாக்கடை மட்டுமே எல்லா இடங்களிலும் ஓடுகிறது.  இந்தியாவில் ஒவ்வொரு கிராமங்களும் மாற வேண்டும். மக்கள் மாற்றங்களின் பேச்சாளர்களாக இல்லாமல் போராளிகளாக மாற வேண்டும். இதற்காக மக்களின் குரல் கேட்க வேண்டும் நடுநிலையாளர்கள் ஆக மக்கள் மாற வேண்டும்” என்றார்.

 

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் வரவேற்பு எப்படி இருக்கிறது.

 

 “அரசியலில் வயது, முன் அனுபவம் இன்மை உள்ளிட்டவை இடையூறாக இருந்தது. அந்த அனுபவங்கள் தற்போது அதிகரித்துள்ளது. மக்களின் ஆதரவு முன்பை விட தற்போது அதிகரித்துள்ளது. இன்றும் மாற்றத்திற்காக நாங்கள் முன் வருவது போல் மக்களும் ஒரு அடி முன் வைக்க வேண்டும். என்பது விருப்பமாக உள்ளது” என்றார்.

 

 







 வேட்பாளர்களை ஆதரித்து  கமலஹாசன் திருப்பரங்குன்றத்தில் பேசியபோது..,”வார்டு சபை அமைத்து வார்டுகளில் செலவான கணக்குகளை மக்களிடையே நேரடியாக சொல்ல வைப்பேன் சொல்லவில்லை என்றால் நான் செய்ய வேண்டியதை செய்வேன். அது மன்னிக்க கூடாத குற்றம் அதை எங்கள் கட்சியில் இருந்து யாரையும் செய்ய விடமாட்டேன். அந்த வாக்கு உறுதியுடன் தான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். ஒரு வார்டில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்னென்ன செலவு செய்யப்பட்டுள்ளது என கூற நாங்கள் தயார் மற்றவர்கள் தயாரா.?. மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் கட்சிக்காக நிற்கவில்லை மக்களுக்காக நிற்கின்றனர்..

நான் எதற்காக அரசியலுக்குள் வந்தேன் நான் வாழ்ந்ததற்கான அடையாளத்தை காட்டுவதற்காக. 



மறுபடியும் வெற்றி பெற வையுங்கள் என கர்வத்துடன் போக வேண்டிய எண்ணெய் அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாத மாதிரி கெஞ்ச விட்டுட்டீங்க. அவர்கள் வியாபாரத்திற்காக கேட்கிறார்கள் நான் நாளைய தலைமுறைகளுக்காக கெஞ்சி கொண்டிருக்கிறேன். மக்களுக்கு அதிகாரம் வழங்கக்கூடிய தைரியம் மக்கள் நீதி மய்யத்திற்கு மட்டும்தான் இருக்கு. மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் கேள்வி கேட்பதற்கும் மாற்றம் செய்வதற்கும் உங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். என்பதற்காக தான்.. தூங்கா நகரம் என்பது மக்கள் எப்பொழுதும் தூங்காமல் இருப்பதற்கு அல்ல சந்தோசமாக தூங்காமல் இருக்க வேண்டும்.



இங்கு மனசாட்சி மட்டும் தூங்கிக் கொண்டிருக்கிறது நகரம் தூங்காமல் உள்ளது. எல்லாரும் மனசாட்சியை தட்டி எழுப்பவேண்டும் 556 கோடிக்கான  சாயல் எங்கேயும் காணவில்லை.. அது எங்கே என நீங்கள் தான் கேட்டு வாங்க வேண்டும். நீங்கள் பயந்து நின்றீர்கள் என்றால் அப்படியே  செல்வார்கள்.. தைரியத்துடன் கேளுங்கள்  கொரோனா விட வேகமாக தைரியம் பரவட்டும் நாளை நமது ஆகும்” என்றார்.