Erode East Bypoll 2025 LIVE: ஈரோடு இடைத்தேர்தல் 2025... விறு விறு வாக்குப்பதிவு! முழு தகவல் உடனுக்குடன்
Erode East Bypoll 2025 LIVE Updates:காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் மதிய வேளையிலும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் பகல் 01 மணி நிலவரப்படி 42.41% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு. வளையக்கார வீதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பெண் வாக்காளரின் வாக்கை வேறு நபர் போட்டு சென்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி குற்றச்சாட்டு..
ஈரோடு வளையக்கார வீதி பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண 168ல் பரிதாபேகம் என்பவரது ஓட்டை வேறு நபர் போட்டுச் சென்றதாக வாக்காளர் தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்
வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக வருகை தந்து வாக்களிக்கும் மாற்றுத்திறனாளிகள். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 85 வயதிற்கு மேற்பட்டோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தலாம்; ஆனால் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு நேரில் வருகை தந்து வாக்கு செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி தனது வாக்கினை செலுத்தினார்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலி மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்த் வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 10.85 சதவீதம் வாக்குபதிவு பதிவாகியுள்ளது
கட்சி துண்டு மற்றும் வேட்டியுடன் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வாக்கு செலுத்தினார். கடந்த இடைத்தேர்தலின் போது தேமுதிக வேட்பாளர் கட்சி துண்டு மற்றும் வேட்டியுடன் வாக்களிக்க வந்தபோது அவருக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 53 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 237 வாக்குச்சாவடிகளில் சரியாக ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
Background
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. வாக்காளர்கள் காலை முதலே வரிசையில் நின்று தங்களது வாக்குகளை அளித்து வருகின்றனர். இந்த இடைத்தேர்தலை முன்னிட்டு 2600 காவல் துறையினர் உட்பட 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடைத்தேர்தலுக்காக 237 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவதொடங்கி நடைப்பெற்றுப் வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஈவிகேஎஸ் இளங்கோவனே போட்டியிடுவதாக அறிவித்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். இதைத்தொடர்ந்து இவரும் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதன் காரணமாக காலியான சட்டமன்றத் தொகுதியில் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தல் களத்தில் திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் 3வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விலகுவதாக அறிவித்துள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலை புறக்கணித்துள்ளது.
தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு நேற்றைய முன் தினம் முதல் இன்று வரை 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -