ஆம்பூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் வைகோவை கடுமையாக விமர்சித்து பேசினார். அவரின் இந்தப் பேச்சுக்கு ஸ்டாலின் எதிர்வினையும், வைகோ கண்டனமும் தெரிவித்தனர்.

Continues below advertisement

ஆம்பூரில் 5 தொகுதி  வேட்பாளர்களை ஆதரித்த நடைபெற்ற பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன?

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், அணைகட்டு, திருப்பத்தூர்  ஆகிய 5   சட்டமன்ற தொகுதியில் அதிமுக  மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஆம்பூர் புறவழிச்சாலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிசாமி, பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்பொழுது பேசிய அவர், ”அதிமுக வேட்பாளர்கள்  வெற்றிபெற அறிகுறி இந்த எழுச்சி, பல்வேறு இடங்களில், ஸ்டாலின் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி, பல தோல்விகளை கண்டுள்ளார் என, திமிரான பேச்சு பேசுகிறார். பிற்காலத்தை நினைத்து பார்க்க வேண்டும், 2011 தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக கூட ஆகவில்லை, ஆண்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது அதிமுக,  கூட்டணியில்லாமல் ஆட்சி அமைத்த கட்சி, அதிமுக கடந்த  நாடாளுமன்ற தேர்தல்களிலும்,  39 இடங்களில் வென்றுள்ளோம், எங்களை பற்றி பேச ஸ்டாலினுக்கு, தகுதி இல்லை, அம்மா இருந்த போது,  இடைத்தேர்தல்களில், வெற்றிபெற வில்லை.

Continues below advertisement

10 ஆண்டுகள் வனவாசம் சென்ற கட்சி

10 ஆண்டுகள் வனவாசம் சென்ற கட்சி எங்களை பேச அருகதை இல்லை, ஏதோ தப்பி 5 ஆண்டு ஆட்சி அமைத்தார்கள், கவர்ச்சிகரமான வாக்குறுதி, மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்று வந்த திமுக, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை, மருத்துவர்கள், செவிலியர்கள், விவசாயிகள், தூய்மை பணியாளர்கள் வீதியில் வந்து போராடுகிறார்கள், அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார், ஸ்டாலின்,  எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் மிச்சம். போராடுவர்களை கைது செய்தவர்கள் திமுகவினர்.

28 மாதம் தொடர்ந்து, சட்டமன்றத்தில், கோரிக்கை வைத்தோம், ஏழை தாய்மார்களை ஏமாற்றி ஆட்சி வந்தவர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தோம், அதன்பின் தான் 1000 ரூபாய் கொடுக்க வைத்தது அதிமுக. 22 மாதங்கள், மகளிர் உரிமை தொகை தரமால்,  நாமம்  போட்டார் ஸ்டாலின். திட்டமிட்டு திமுக கூட்டணி, கவர்ச்சிகரமாக பேசி வாக்குபெற்றார்கள். 2021 அதிமுக தேர்தல் அறிக்கை எங்கள் பின்னர் தான் வெளியிட்டார்கள். 

எங்களை காப்பி அடித்தது திமுக, தற்போது, திமுகவிற்கு முன் 8 நாள்களுக்கு முன் தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதிமுக, எங்களை காப்பியடித்து ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில், 4 இல் ஒரு பங்கு வாக்குறுதிகள் கூட நிறைவேற்றவில்லை திமுக, ஆளுங்கட்சி இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தியது அதிமுக.

உங்கள் அப்பா இருக்கும் போது கூட  எங்களை வீழ்த்த முடியவில்லை

ஸ்டாலின் உங்கள் அப்பா இருக்கும் போது கூட  எங்களை வீழ்த்த முடியவில்லை, உங்களை திணற வைத்தது, அதிமுக. ஆர்.கே.நகர் தேர்தலில் ஸ்டாலின் டெபாசிட் இழந்துள்ளார். திமிரான பேச்சை நிறுத்துங்கள் எங்கள் தொண்டன் பதிலடி கொடுப்பான். தமிழ்நாட்டில், பாலியல் வன்கொடுமை நடக்காத நாட்கள் இல்லை, தப்பி தவறி முதல்வர் ஆகிவிட்டார்,  2 வயது குழந்தை கூட விட்டு வைக்கவில்லை, பெண்கள் இப்போது தான் வேலை செல்கிறார்கள் என கூறுகிறார் ஸ்டாலின், பெண்கள் எப்போதே வேலைக்கு சென்று விட்டார்கள், நாட்டை பற்றி தெரியாமல், இருக்கிறார், பொம்மை முதல்வர். இந்த ஆட்சியில் பெண்கள், சிறுமி, பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை, கஞ்சா விற்காத இடம் இல்லை, திமுகவினர் கஞ்சா விற்பனைக்கு துணை நிற்கிறார்கள். அதனால் காவல்துறையினரால், கஞ்சாவை கட்டுப்படுத்த முடியவில்லை, அதிமுக ஆட்சிக்கு வந்ததும்,, 3 மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்

தமிழ்நாட்டில், 4 முதல்வர்கள் இருக்கிறார்கள். ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா என நான்குபேர் போட்டி போட்டு,  தமிழ்நாட்டை ஆட்டிபடைத்துக்கொண்டு இருக்கின்றது. குடும்ப ஆட்சிக்கு, முடிவு கட்ட வேண்டும். சிறுபான்மையினரை கண் இமைபோல் காத்தோம் அதிமுகிவினர். பாஜகவினருடன் கூட்டணி வைத்தால் இஸ்லாமியர்களை காக்கமாட்டோம் என்பது, பொய், கூட்டணி வேறு, கொள்கை வேறு அதிமுக அதில் மாறாதுஅதிமுக தான் இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கும்.

சட்டமன்ற தேர்தல் தான் நடக்கிறது, தமிழ்நாடு, டெல்லி என கூறுகிறார், ஸ்டாலின்  தமிழ்நாட்டில் எங்களை குறை கூற திமுகவிற்கு எதும் இல்லை. சந்தோஷமாக இல்லை திமுகவினர் கூட்டணியினர். திமுகவை புகழ்ந்த கூட்டணிகளுக்கு, புகழுக்கு கிடைத்த பரிசு ஒரு சீட் மைனஸ், அழுதுகொண்டே கொண்டு சிரிக்கேன்றேன் என கூறுகிறார்கள் கூட்டணியினர். 3 மணி நேரத்தில் கூட்டணி என முடிவு செய்தோம், ஜெட் வேகத்தில் செல்கிறது அதிமுக. எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி, நிறைய கட்சி திமுகவில் கூட்டணியில் உள்ளது, கூட்டணி ஓட்டு போட முடியாது, மக்கள் ஓட்டு போட வேண்டும், வாக்கு சதவிகதம், மக்கள் செல்வாக்கு, அதிமுகவிற்கு உள்ளது.

தேமுதிகவுக்கு 10 சீட் தேவையா?

தேமுதிக தான் சேர்ந்திருக்கிறார்கள். அரை சதவிகதம்தான் தேமுதிக, அவர்களுக்கு 10 சீட், 2 சதவிகிதம், வாங்கிய கட்சிக்கு 3 சீட்,  திமுக கூட்டணியில் உள்ளவர்களுக்கு, படித்து படித்து சொன்னோம், அவர்களுக்கு சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனை கூறுங்கள் என கூறினோம், கூட்டணியினர் தகுதியை இழந்துவிட்டனர் 

யாரை எதிர்த்து மதிமுக கட்சியை ஆரம்பித்தார் வைகோ, இப்போது அவர்கள் சின்னத்தில் போட்டியிட உள்ளார். சரணாகதியடைந்து, திமுகவில் இருக்கிறார் வைகோ வெட்கமாக இல்லை. பச்சோந்தி கொஞ்சம் நேரம் கலர் மாறும், அடிக்கடி நிறம் மாறுபவர் ஸ்டாலின் வெக்கமாக இல்லை, வீட்டு வரி, மின்கட்டணம் உயர்வு, குப்பைகூட வரி, உணவு பொருட்கள் வரி, வரிசுமையால் மக்கள் திண்டாடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களை துவக்கினோம், 11 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்தோம்,  ஒரு மருத்துவகல்லூரி கூட திமுகவினர் கொண்டு வரவில்லை திமுகவினர் 5 ஆண்டு போட்டோ ஷூட் எடுத்து,  அதனை ஊடகத்தில் வெளிவிடுவார்கள் திமுகவினர், அதிமுக ஆட்சியில் மளிகை கடையில் உள்ள அரிசி போல ரேஷன் கடையில் கிடைக்கும், பருப்பும் இலவசம்” எனப் பேசினார்.