Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
Edappadi Palanisamy Election Campaign: அதிமுக நிச்சயமாக ஆட்சிக்கு வரும். ஆட்சிக்கு வந்ததும் 3 மாதங்களில் கஞ்சா முழுமையாக ஒழிக்கப்படும். பின்பு சட்டத்தின் ஆட்சி நடக்கும்- ஈபிஎஸ்.

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும் அதிமுக ஆட்சியில் 3 மாதங்களில் கஞ்சா ஒழிக்கப்படும் எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார்.
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:
வாரிசு அரசியல் தமிழ்நாட்டுக்குத் தேவையா? குடும்ப அரசியலுக்கும் வாரிசு ஆட்சிக்கும் முடிவு கட்டுங்கள். அவர்கள் வேறு யாரையும் வர விட மாட்டார்கள். ஒருகாலத்தில் ஸ்கார்ட்லாந்து காவல்துறைக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறை இருந்தது. இன்று திமுகவுக்கு ஏவல் துறையாக மாறிவிட்டது. காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அமோகம்
இப்போது தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. எது கிடைக்கிறதோ இல்லையோ, கஞ்சா எளிதாக கிடைக்கிறது. திரவம், ஊசி, சாக்லேட் என பல வடிவத்தில் கஞ்சா விற்பனை நடக்கிறது. திமுக துணையுடன்தான் விற்பனையே நடக்கிறது. அதிமுக நிச்சயமாக ஆட்சிக்கு வரும். ஆட்சிக்கு வந்ததும் 3 மாதங்களில் கஞ்சா முழுமையாக ஒழிக்கப்படும். பின்பு சட்டத்தின் ஆட்சி நடக்கும்.
அதிமுக என்ன செய்தது?
அதிமுக ஆட்சியில் புயல், வறட்சியின் பாதிப்புகளை சீரமைத்தோம். கொரோனா காலத்தில் ஓராண்டுக்கு ரேஷனில் விலையில்லா அரிசி, எண்ணெய், பருப்பு வழங்கினோம். குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். பொங்கல் பண்டிகைக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். ஒரு ரூபாய் வருமானம் இல்லாத காலகட்டத்தில் இதைச் செய்தோம். மருத்துவ காலத்தில் சிறப்பாக செயல்பட்டு, விலை மதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றினோம்.
கூட்டணி கட்சிகளுக்கு அவர்களுக்கான சின்னத்தைக் கொடுத்து, அவர்களுக்கு உயிரைக் கொடுத்துப் பிரச்சாரத்தை செய்யும் கட்சி அதிமுக. ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள அதிமுகவை திமுகவால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
திமுகவுக்கு இது இறுதித் தேர்தல்
திமுகவுக்கு இது இறுதித் தேர்தல் என்று மக்கள் முடிவெடுத்து விட்டனர். நாட்டில் முதலமைச்சராக இங்கு பிறந்த அனைவருக்கும் உரிமை உண்டு. அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும். தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















