DMK Alliance TN Election 2026: சட்டப்படி தேர்தலை ஒட்டி கண்டிப்பான பேச்சுவார்த்தையின் மூலம், கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக நிறைவு செய்துள்ளது.

Continues below advertisement

திமுக தொகுதிப் பங்கீடு நிறைவு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இறுதிகட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் முழு வேகத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக வரும் மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் தொடங்குவதற்கு முன்பாகவே, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை, யாருக்கு எந்தெந்தந்த தொகுதிகள் என்பதை இறுதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளன. அந்த வகையில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. மிகவும் கறாராக பேச்சுவார்த்தை நடத்திய திமுக, பல்வேறு கூட்டணி கட்சிகளுக்கும், கடந்த முறை ஒதுக்கியதை காட்டிலும் குறைவான தொகுதிகளையே இந்த முறை ஒதுக்கியுள்ளது. இதனால், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை காட்டிலும் கூடுதல் தொகுதிகளில் திமுக இந்த முறை வேட்பாளர்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

2021 Vs 2026 - திமுக தொகுதிப் பங்கீடு

கட்சி2021 ஒதுக்கிய தொகுதிகள்2026 ஒதுக்கிய தொகுதிகள்
திமுக173168
காங்கிரஸ்2528
தேமுதிக -10
விடுதலை சிறுத்தை கட்சிகள்68
இந்திய கம்யூனிஸ்ட்65
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்65
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்6 (உதயசூரியன் சின்னம்)4 (3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம்)
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்32
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி3 (உதயசூரியன் சின்னம்)2 (உதயசூரியன் சின்னம்)
மனிதநேய மக்கள் கட்சி2 (உதயசூரியன் சின்னம்)2 (உதயசூரியன் சின்னம்)
தமிழக வாழ்வுரிமை கட்சி1 (உதயசூரியன் சின்னம்)கூட்டணியிலிருந்து விலகல்

திமுகவிற்கு எத்தனை தொகுதிகள்?

கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை காங்கிரசுக்கு கூடுதலாக 3 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா ஒரு தொகுதி குறைத்து ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் மதிமுக வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த முறை 3 தொகுதிகளில் உதயசூரியன், ஒரு தொகுதியில் தனிசின்னம் என மொத்தமே 4 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. கடந்த முறை போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் தோல்வியுற்ற, இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு இந்த முறை 2 தொகுதிகள் மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளன. மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால், அந்த எண்ணிக்கை அப்படியே நீட்டிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் போக இன்னும் 168 தொகுதிகளை திமுக கைவசம் உள்ளன. அதிலிருந்து கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி, ஆதி தமிழர் பேரவை உள்ளிட்ட தரப்புக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், அனைவர்ம் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது. இதனால், 175 தொகுதிகளில் திமுக போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதாவது கடந்த தேர்தலில் 188 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்ட நிலையில், இந்த முறை அந்த எண்ணிக்கை அதிகபட்சமாக 175 ஆக குறைந்துள்ளது.