மேலும் அறிய

DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு

TN Election 2026 DMK: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, வரும் பிப்ரவரி 22ம் தேதி முதல் தொடங்கும் என திமுக அறிவித்துள்ளது.

TN Election 2026 DMK: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்காததால் திமுக கூட்டணியில் குழப்பம் நிலவுவதாக பேசப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொகுதிப் பங்கீடு - திமுக அறிவிப்பு

திமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”கழகத் தலைவரால் விரைவில் அமைக்கப்படவுள்ள திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவானது சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன், பிப்ரவரி 22-ம் தேதி முதல் தோழமை கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக இன்னும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்காதது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது. கூட்டணியில் சிக்கல் நிலவுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தான், வரும் பிப்ரவரி 22ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கவிருப்பதாக திமுக அறிவித்துள்ளது.

திமுக கூட்டணி கட்சிகள்:

திமுகவின் மிகப்பெரிய பலமாக அதன் வலுவான கூட்டணி கட்டமைப்பு கருதப்படுகிறது. அதன்படி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் மற்ற கட்சிகள் அனைத்துமே திமுக உடனான கூட்டணி தொடருமென உறுதி செய்துள்ளன. ஆனால், காங்கிரஸ் மட்டும் இரட்டை நிலைப்பாட்டுடன் இருப்பதாக அந்த கட்சியின் நகர்வுகள் தெரிகின்றன. கடந்த 2 மாதங்களாகவே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திமுக அழைக்கும் என காத்திருப்பதாகவும், ஆனால் எந்தவித அழைப்பும் இல்லை என்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வெளிப்படையாகவே பேசியுள்ளார். இதுபோக தவெக உடன் மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணி - யாருக்கு எத்தனை தொகுதிகள்?

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலின்போது திமுக 174 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. இதுபோக 14 தொகுதிகளை பல சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கினாலும், அந்த வேட்பாளர்களை தனது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட செய்தது. தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டன. மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர். இதேபோன்று மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டு, அந்த வேட்பாளர்கள் அனைவருமே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர்.

அதேநேரம், இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  மேலும், அனைத்து இந்தியா ஃபார்வர்ட் ப்ளாக், மக்கள் விடுதலை கட்சி மற்றும் ஆதி தமிழர் பேரவை ஆகிய கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. தேர்தலின் முடிவில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற, திமுக 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த முறை அனைத்து கட்சிகளுமே குறிப்பாக காங்கிரஸ் தங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருப்பத்தூர் MLA-வாக ஜெயித்தால் இதை கட்டாயம் செய்வேன்... உடனே ஆதரவு தந்த பெண்கள்.. நாதக வேட்பாளர் கொடுத்த வாக்குறுதி என்ன?
திருப்பத்தூர் MLA-வாக ஜெயித்தால் இதை கட்டாயம் செய்வேன்... உடனே ஆதரவு தந்த பெண்கள்.. நாதக வேட்பாளர் கொடுத்த வாக்குறுதி என்ன?
விஜய் நேர்காணல்: தவெக வேட்பாளர்கள் எதிர்பார்ப்பு! விஜய் எங்கு போட்டியிடுகிறார்? பரபரப்பு தகவல்!
விஜய் நேர்காணல்: தவெக வேட்பாளர்கள் எதிர்பார்ப்பு! விஜய் எங்கு போட்டியிடுகிறார்? பரபரப்பு தகவல்!
வாக்குறுதி நல்லாருக்கு.. ஆட்சிக்கு வருவாரா விஜய்? - வானதி சீனிவாசன் கொடுத்த பதில்!
வாக்குறுதி நல்லாருக்கு.. ஆட்சிக்கு வருவாரா விஜய்? - வானதி சீனிவாசன் கொடுத்த பதில்!
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
Embed widget