வேலூர் மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள், குடியாத்தம் நகராட்சியில் 36 வார்டுகள். பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகள், பள்ளிகொண்டா பேரூராட்சியில் 18 வார்டுகள், ஒடுகத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள். பென்னாத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள். திருவலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் என மொத்தம் 180 கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த பதவிகளுக் கான மனுத்தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கி நேற்றுவுடன் நிறைவு பெற்றது. இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற வரும் 7ம் தேதி கடைசி நாள். இதையடுத்து இறுதிசைகளும் என மொத்தம் வேட்பாளர் பட்டியல் அன்று மாலையே அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதியும், 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 7வது நாளான நேற்று காலை 10 மணிக்கு வேட்டபுமனு தாக்கல் தொடங்கியது. இதில் வேலூர் மாநகராட்சியில் திமுக, அதிமுக, பாமக, பாஜக சுயேட்சை வேட்பாளர்கள் என மாநகராட்சி பகுகுதியில் மட்டும் மொத்தம் 505 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று அதற்கான பரிசீலனை நடைபெற்றது.
இதில் வேலூர் மாநகராட்சி மண்டலம் ஒன்றுக்குட்பட்ட காட்பாடி பகுதியில் 8-வது வார்டில் திமுக சார்பில் சுனில்குமார் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார். அதேபோல் 8வது வார்டில் அதிமுக, பா.ம.க, பா.ஜ.க என கட்சிகளை சார்ந்த மொத்தம் 6 வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இந்நிலையில் இன்று வேட்புமனுக்களுக்கான பரிசீலனை நடைப்பெற்றது. இதில் 8 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரி எடுத்து பரிசீலனை செய்தார். அப்போது முதலாவதாக அதிமுக நபரின் வேட்புமனுவை எடுத்து பரிசீலனை செய்தார் அதில் பல்வேறு காரணங்களால் வேட்புமனு தள்ளுபடி செய்தார். அதே போன்று பாஜக வேட்பாளர் மற்றும் பாமக வேட்பாளர் சுயேட்சை வேட்பாளர் என மீதம் 3 வேட்பாளர்களின் மனுக்களை தேர்தல் அதிகாரி பரிசீலனை செய்தார். ஆனால் அவர்களின் மனுக்களும் பல்வேறு காரணங்களால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் கடைசியாக திமுக வேட்பாளர் சுனில் குமாரின் மனுவை தேர்தல் அதிகாரி பரிசீலனை செய்தார் அப்போது சுனில்குமாரின் மனு மட்டும் ஏற்கப்பட்டது என தேர்தல் அதிகாரி தெரிவித்தார் என கூறப்படுகிறது. இதனால் அங்கு இருந்த திமுக வேட்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வெளியே சென்று பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.
அதனைத் தொடர்ந்து வேலூர் மாநகராட்சியில் இதுவரை நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் முதல் முறையாக திமுகவை சேர்ந்த 8 வது வார்டு சுனில்குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.