நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதுதற்போது வரை தேர்தல் எப்போது என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில கட்சிகள் கூட்டணியை முடிவு செய்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. முன்னதாக, காங்கிரஸ், பாஜக, திமுக ஆகிய காட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஒரு சில தொகுதிகளுக்கு அறிவித்து உள்ளன.


இதனிடையே, அதிமுக மற்றும்  தேமுதிக  இடையிலான 2-ம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை சமீபத்தில் நடந்தது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி உறுதி என்ற நிலையை எட்டியுள்ளதாக தேமுதிகவின் அவைத்தலைவர் இளங்கோவன் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் பாஜக உடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இச்சூழலில் தான் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதை மறுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "பாஜகவுடன் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை" என்று கூறியுள்ளார். மேலும், " கூட்டணி பேச்சுவார்த்தைக்கு நேரம் ஏதும் தாங்கள் ஒதுக்கவில்லை" என்றும் கூறியுள்ளார்.