Delhi Election Result 2025 LIVE: பாஜக வசம் தலைநகரம் - முக்கிய தலைகளை இழந்த ஆம் ஆத்மி, யார் யார் தெரியுமா?

Delhi Election Result 2025 LIVE Updates:பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இரண்டும் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதில் நம்பிக்கையை வெளிப்படுத்தி உறுதியாக உள்ளன.

Advertisement

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 08 Feb 2025 01:48 PM

Background

Delhi Election Result 2025 LIVE Updates in Tamil: டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெறும், ஆம் ஆத்மி கட்சி (AAP) தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது 27 ஆண்டுகளுக்குப் பிறகு...More

Delhi Election Result 2025 LIVE: அமித் ஷா மகிழ்ச்சி

Delhi Election Result 2025 LIVE: உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “தொடர்ச்சியான பொய் வாக்குறுதிகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்த முடியாது என்பதை டெல்லி மக்கள் காட்டியுள்ளனர். அசுத்தமான யமுனை, அசுத்தமான குடிநீர், உடைந்த சாலைகள், நிரம்பி வழியும் சாக்கடைகள் மற்றும் ஒவ்வொரு தெருவிலும் திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகள் ஆகியவற்றிற்கு பொதுமக்கள் தங்கள் வாக்குகளால் பதிலளித்துள்ளனர். டெல்லியில் இந்த மகத்தான வெற்றிக்காக இரவும் பகலும் உழைத்த அனைத்து பாஜக தொண்டர்களையும் நான் மனதார வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.