தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. நீண்ட இழுபறிக்குப் பிறகு, தேசியக் கட்சியான காங்கிரஸிற்கு 28 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் காங்கிரஸூக்கு எந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை காணலாம். 

சமரசம் செய்துகொண்ட காங்கிரஸ்?

ஆரம்பத்தில் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் கோரி வந்த காங்கிரஸ் கட்சி, திமுகவின் பிடிவாதத்தால் ஒரு கட்டத்தில் கூட்டணி முறியும் நிலைக்குச் சென்றது. இருப்பினும், மூத்த தலைவர் ப. சிதம்பரம் தலையிட்டு நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின், கடந்த முறையை விட 3 இடங்கள் கூடுதலாகப் பெற்று 28 இடங்களுக்கு காங்கிரஸ் சம்மதித்துள்ளது.

காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் - முழு விவரம்:

சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் முக்கியமான தொகுதிகளை காங்கிரஸ் இம்முறை தட்டிச் சென்றுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் வழக்கமாக போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகள் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எண்தொகுதி பெயர்வகை / குறிப்பு
1பொன்னேரிதனித் தொகுதி
2திருபெரும்புதூர்தனித் தொகுதி
3சோளிங்கர்பொது
4உதகமண்டலம்பொது
5ஈரோடு கிழக்குபொது
6அறந்தாங்கிபொது
7கடலூர்பொது
8மயிலாடுதுறைபொது
9காரைக்குடிபொது
10சிவகாசிபொது
11திருவாடனைபொது
12திருவைகுண்டம்பொது
13நாங்குநேரிபொது
14குளச்சல்பொது
15விளவங்கோடுபொது
16கிள்ளியூர்பொது
17வேளச்சேரிபொது
18ஊத்தங்கரைதனித் தொகுதி
19துறையூர்தனித் தொகுதி
20கவுண்டம்பாளையம்பொது
21ஆத்தூர்தனித் தொகுதி
22பென்னாகரம்பொது
23சிங்காநல்லூர்பொது
24அம்பாசமுத்திரம்பொது
25கிருஷ்ணகிரிபொது
26உசிலம்பட்டிபொது
27சங்கரன்கோவில்தனித் தொகுதி
28மேலூர்பொது

இந்த 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களது அதிகாரப்பூர்வ 'கை' சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.