வேட்பு மனு - பரிசீலனை

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் நேற்றோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் 7600 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று வேட்புமனு மீது பரிசீலனை நடைபெற்றது. அப்போது வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பாக போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா மீது பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஜி. தேவராஜன் என்ற சமூக ஆர்வலர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

Continues below advertisement

சொத்துக்களை மறைத்தாரா ஆதவ் அர்ஜூனா.?

அந்த புகாரில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரான ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனுவுக்கு எதிராக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வேட்பு மனு பரீசிலனையின போது தான் எழுப்பிய வாய்மொழி ஆட்சேபணைகளின் தொடர்ச்சியாக  எழுத்துப்பூர்வமான ஆட்சேபணைகளை அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுப் படிவங்களில் தகவல்களை வெளியிடாமலும், மறைத்தும் உள்ளதை எனது ஆட்சேபனைகள் மூலம் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ஒரு வேட்பாளர் தனது குற்றப் பின்னணிகள், சொத்துக்கள் மற்றும் கடன்கள், மற்றும் அவரது துணைவியார் தொடர்பான முழுமையான, சரியான மற்றும் உண்மையான தகவல்களை வெளிப்படுத்துவது அவரது கடமையாகும்.

 ஆதவ் அர்ஜூனா மீது புகார்

ஆனால், வேட்பாளரான ஆதவ் அர்ஜுனா,  சொத்துக்கள் தொடர்பாக பல்வேறு முக்கியத் தகவல்களை மறைத்துள்ளார். அதன் படி,  எனவே, தமிழக வெற்றி கழகத்தால் நிறுத்தப்பட்ட வேட்பாளரான ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

Continues below advertisement

மார்ட்டின் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்,,மார்ட்டின் டவுன்ஷிப் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்மார்ட்டின் எலைட் புரோமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்,,மார்ட்டின் டுவெல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட்,மார்ட்டின் ஹை-டெக் கன்ஸ்ட்ரக்ஷன்,உள்ளிட்ட 14 நிறுவனங்களின் பட்டியலையும் சுயேட்சை வேட்பாளர் அந்த புகார் மனுவில் இணைத்துள்ளார்.

வேட்புமனுவை நிராகரியுங்கள்

மேலும், பல சொத்துக்கள், PMLA சட்டத்தின் விதிகளின் கீழ் அமலாக்க இயக்குநரகத்தால் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். டாமினன்ட் டவர்ஸ் அண்ட் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 123 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனச் சொத்துக்களும், 22 கோடி ரூபாய் மதிப்புள்ள பரஸ்பர நிதிகளும் அமலாக்கத்துறையின் முடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மார்ட்டின் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 17.7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்க இயக்குநரகத்தின் முடக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இந்த தகவலை அனைத்தையும் வேட்பாளர்  ஆதவ் அர்ஜுனா தனது தேர்தல் வேட்புமனுப் படிவங்களில் வேண்டுமென்றே மற்றும் உள்நோக்கத்துடன் மறைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.  எனவே, ஆதவ் அர்ஜுனா  வேட்புமனு நிராகரிக்கப்படத் தகுதியானது என சுயேட்சை வேட்பாளர் ஜி.தேவராஜன் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.