கோவை மாநகராட்சியில் உள்ள, 100 வார்டுகளில், 96 இடங்களை தி.மு.க., கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது.  கோவை மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக கோவை மணியகாரன்பாளையம் பகுதியை சேர்ந்த கல்பனா அறிவிக்கப்பட்டுள்ளார். 40 வயதான கல்பனா 19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆவார். அவர் பெற்ற வாக்குகள் 3702.  1965 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 


அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கபப்ட்டார். கோவை மேயர் பதவி பெயர் எதிபார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. செந்தில் பாலாஜி கைக்காட்டுபவர் மேயர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்பட்டது. முன்னதாக``சமீபத்தில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் மாவட்டப் பொறுப்பாளர் கார்த்திக்கு எதிராக மகளிரணித் துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் வைத்த பகிரங்கக் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருக்கான வாய்ப்பு குறைவுதான் என சொல்லப்பட்டது. 


கோவை துணை மேயர் வெற்றி செல்வன் எஸ். பி. வேலுமணியின் சொந்த வார்டில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றவர். இதுவரை கோவை மாநகராட்சி மேயர் பதவியை தி.மு.க. நேரடியாக அலங்கரித்தது இல்லை. கூட்டணி கட்சிக்கே மேயர் பதவியை ஒதுக்கி கொடுத்துள்ளது. 


கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் கோவையில்  திமுகவின் முதல் மேயர் என்ற பெருமையை முதல் முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்வுத் செய்யப்பட்ட கல்பனா பெறுகிறார்.


கோவை மாநகராட்சி மேயராக போட்டியிடுகின்ற கல்பனாவின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. 


அதாவது அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு கல்பனா பெயரில் ரூ. 6,80,061 உள்ளது எனவும் கணவரின் பெயரில் ரூ. 67,10,000 உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


அதேபோல், சென்னை மேயர் திமுக வேட்பாளர் பட்டியல் 



பிரியா ராஜனின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ன விவரம் வெளியாகியுள்ளது. பிரியா ராஜனிடம் 8 லட்சத்து 24 ஆயிரத்து 941 ரூபாய் (ரூ.8,24,941) மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன. 


அசையா சொத்துகளோ, சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்துகளோ அவரிடம் இல்லை. இதன்படி சென்னை மேயர் வேட்பாளரிடம் மொத்தமாக  8 லட்சத்து 24 ஆயிரத்து 941 ரூபாய் (ரூ.8,24,941) சொத்து உள்ளது.


கணவர் ராஜாவிடம் ரூ.3,80,179 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன. அசையா சொத்துகள் எதுவும் அவரிடம் இல்லை.  சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்தின் விலை மதிப்பு ரூ.67,500 ஆக உள்ளது. சுய சம்பாத்திய சொத்து மொத்த மதிப்பு ரூ.1,25,000 ஆக உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.5,05,179 ஆக உள்ளது. 


மாநகராட்சித் தேர்தல் வேட்பாளர் வேட்புமனுத் தாக்குதலின்போது உறுதிமொழி ஆவணத்தில் அவர் தாக்கல் செய்துள்ள விவரங்களின்படி, இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.