மதுரையில் மதுரை வேட்பாளர் சு. வெங்கடேசன் மற்றும் சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.


அப்போது பேசிய அவர், “ எந்த முகத்துடன் தமிழ்நாட்டிற்கு வருகிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டுக்கு எந்த நலத்திட்டங்களை வழங்கிவிட்டு ஓட்டு கேட்க வந்திருக்கிறார் மோடி. மராட்டியத்தில் குதிரை பேரம் நடத்தி ஆட்சியை கவிழ்த்தி அந்த மாநிலத்தையே நாசமாக்கிவிட்டார் மோடி. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் ED, IT, CBI, ஆளுநர்களை வைத்து தொல்லை கொடுப்பது மோடியின் ஆட்சி. மோடிக்கு ஊழலை ஒழிக்கும் எண்ணம் இல்லை” என்று பேசி வருகிறார்.