தேர்தல் திருவிழா தொடங்கியது

நாடே எதிர்பார்த்து காத்திருந்த 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேரளா,புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 9ஆம் தேதியும், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இந்த 5 மாநிலங்களில் தேர்தல் திருவிழா தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போது வரை திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டியானது உறுதியாகியுள்ளது. எனவே வேட்பாளர்கள் தேர்வு செய்து இன்னும் ஒரு வார காலத்தில் அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில் கேரளா,புதுச்சேரி, அஸ்ஸாம் மாநிலங்களில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் இந்த மாதம் இறுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது. 

Continues below advertisement

வேட்பு மனு தாக்கல்-தயாராகும் வேட்பாளர்கள்

அதிலும் ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதில் 3 நாட்கள் விடுமுறை நாட்களாக வருவதால் வெறும் 5 நாட்களுக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டிய நிலை அரசியல் கட்சிகளுக்கு உருவாகியுள்ளது. எனவே வேட்பு மனு செய்யும் அலுவலகத்தில் வேட்பாளர்களின் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் வேட்புமனு தாக்கல் செய்யும் போது  4பேர் மட்டுமே உடன் வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், வேட்பாளர்கள் ஆன்லைன் மூலம் வேட்புமனுவை தாக்கல் செய்ய வாய்ப்பானது உருவாக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்

அந்த வகையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் சுவிதா (Suvidha) செயலி மூலம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் வசதி தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள சுவிதா (Suvidha) ஆப் மூலம் தேர்தல் தொடர்பாக பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ளவும், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய அனுமதி வாங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில்,  இந்த ஆப்பில் புதிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டு  'சுவிதா 2.0' (Suvidha 2.0) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வேட்பாளர்கள் மொபைலிலேயே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், பிரச்சாரத்திற்கு அனுமதிச் சீட்டுகளைப் பெறவும் வழிவகுக்கிறது. 

Continues below advertisement

 'சுவிதா 2.0'- வேட்புமனு தாக்கல்

ஏற்கனவே ஆன்லைனில் வேட்புமனுதாக்கல் செய்யும் வசதி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலையில், வேட்பாளர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத நிலை தான் நீடித்து வந்தது. இதற்கு முக்கிய காரணமாக வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதியானது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் வேட்பாளர்கள் 'சுவிதா 2.0' (Suvidha 2.0) ஆப்பில் வேட்பாளர்கள் தங்கள் மொபைல் எண் மூலம் பதிவு செய்த பிறகு தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால் போதும். அடுத்தாக வேட்பாளர்கள் தொடர்பாக அனைத்து தகவலும் அந்த ஆப்பில் காட்டும். அடுத்தாக வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரம், வழக்கு விவரங்கள் மற்றும் பிரமாணப் பத்திரங்களோடு உரிய ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து தங்களது வேட்புமனு சமர்பிக்கலாம். 

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்வார்களா.?

எனவே நவீன காலத்திற்கு ஏற்ப மக்கள் மாறி வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் ஆனிலைனிலேயே வேட்புமனு தாக்கல் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. எனவே தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய நடைமுறையை வேட்பாளர்கள் பயன்படுத்திக்கொள்வார்களா.? அல்லது எப்போதும் போல் விளம்பரத்திற்காக நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுக்க வேட்புமனு தாக்கல் செய்வார்களா.? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.