சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 கூட்டங்களில் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக போன்ற அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 618 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பல்வேறு அணுகுமுறைகள் மேலும், அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாநகராட்சி 13 ஆவது கோட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜ் குமார் அப்பகுதிக்கு உட்பட்ட திருநகர் டி.வி.எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். மேலும், வேட்பாளர்களை கவரும் விதமாக டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து ஆதரவு திரட்டினார். 



இதேபோல், சேலம் மாநகராட்சி 11 ஆவது கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இளவரசி பொன்னம்மாபேட்டை தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக தாமரை மாலை அணிந்தபடி பெண்களுக்கு தாமரைப்பூக்கள் வழங்கி தனக்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.



சேலம் மாநகராட்சி 34-வது கோட்டத்தில் திமுக அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர் கோகிலவாணி ஜோதி தியேட்டர் கிழக்கு தெரு ராஜகணபதி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மேளதாளங்கள் முழங்க வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அவரது கணவர் வாக்காளர்கள் இடையே தெலுங்கில் பேசி வாக்கு கேட்டார்.



அதே கோட்டத்தில் திமுக வேட்பாளர் ஈசன் இளங்கோ குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைதியான முறையில் வீடு வீடாக சென்று கடந்த 8 மாத கால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்து வைத்துள்ள கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சிகள் உதவிவரும் சுகாதார சீர்கேடுகள் குறித்தும் எடுத்துரைத்து வாக்காளர்களை சந்தித்தார். மேலும் பால் வெற்றி பெற்றால் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றப்படும் என்பது குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.



இதேபோல் சேலம் மாநகராட்சியில் 40 ஆவது கோட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உமாராஜ் தனது ஆரவாரமின்றி தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்தார். குறிப்பாக அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட திட்டங்களையும் திமுக ஆட்சியில் தரமற்ற பொங்கல் தொகுப்பு வழங்கியது, இல்லத்தரசிகளுக்கான உதவித்தொகை வழங்காதது என திமுக ஆட்சி குறித்த விமர்சனங்களை முன்வைத்து ஆதரவு கோரினார். சேலம் மாநகராட்சி ஏழாவது கோட்டத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சாரதா தேவி வாக்காளர்களின் காலில் விழுந்து வணங்கி ஆதரவு திரட்டினார்.