Assembly Election Results 2021 Live: | ஐந்து மாநிலங்களுக்கான முடிவுகள் 2021| 61,035 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தார் ஷைலஜா டீச்சர்..
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலத் தேர்தல்கள் முன்னிலை பின்னிலை விபரங்கள்:
ABP NADULast Updated: 02 May 2021 07:23 PM
Background
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னிலை யார்? பின்னடைவு யார்? உடனடித் தகவல்களுக்குக் இங்கே இணைந்திருங்கள். வாக்கு எண்ணிக்கை இன்று (2 மே 2021) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. ...More
மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்றுள்ள மம்தா பானர்ஜிக்கு எனது வாழ்த்துகள்-மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
மேற்கு வங்கத்தில் வலுவான முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சரத் பவார் வாழ்த்து
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 216 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் தேசியவாத கட்சி தலைவர் சரத் பவார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீங்கள் மக்களுக்கான ஆட்சியை தந்ததால் மீண்டும் மக்கள் உங்களை தேர்வு செய்துள்ளனர்'- பினராயி விஜயனுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வாழ்த்து
கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் கூட்டணி 93 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் கேரளாவில் மீண்டும் ஆட்சியமைக்க போகும் பினராயி விஜயனுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், "நீங்கள் மக்களுக்கான ஆட்சியை தந்ததால் மீண்டும் மக்கள் உங்களை தேர்வு செய்துள்ளனர். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
நந்திகிராம் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி பின்னடைவு
நந்திகிராம் தொகுதியில் 16 சுற்றுகளின் முடிவில் பாஜகவின் சுவந்து அதிகாரி 6 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
கொல்கத்தா பாஜக அலுவலகத்திற்கு முன்பாக குவிந்த திரிணாமுல் தொண்டர்கள்
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 202 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்தச் சூழலில் திரிணாமுல் தொண்டர்கள் கொல்கத்தாவிலுள்ள பாஜக அலுவலகத்திற்கு முன்பாக குவிந்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் இடதுசாரிகள் கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை
திருவனந்தபுரத்தில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 12 தொகுதிகளில் இடதுசாரிகள் கூட்டணி முன்னிலையில் உள்ளது. மேலும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் ஆளும் இடதுசாரிகள் கூட்டணி முன்னிலையில் உள்ளது.
நந்திகிராம் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலை
மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் 5 ஆயிரம் வாக்குகள் பினதங்கி இருந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி தற்போது 1417 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
கேரளாவின் பல்வேறு மாவட்டத்தில் இடதுசாரிகள் கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை இடதுசாரிகள் கூட்டணி 90 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
மொட்டையடித்துக்கொள்வதாக பெட் வைத்த கேரள காங்கிரஸ் வேட்பாளர்!
கேரளாவின் உடும்பஞ்சோலா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆகஸ்தி இந்தத் தேர்தலில் தான் தோற்றால் தனது தலையை மொட்டையடித்துக் கொள்வதாக பெட் வைத்திருந்தார். தற்போது அவருக்கு எதிராகப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் எம்.எம்.மணி பெருவாரியான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
கேரளா மற்றும் அசாமில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு
கேரளா மற்றும் அசாம் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 46 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதேபோல் அசாமில் காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கேரள சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.
நந்திகிராம் தொகுதியில் தொடர்ந்து மம்தா பானர்ஜி பின்னடைவு:
நந்திகிராம் தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 8106 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். பாஜகவின் சுவந்து அதிகாரி முன்னிலையில் உள்ளார்.
Election Live Updates : மேற்கு வங்கத்தில் 31 இடங்களில் திரிணாமுல் முன்னிலை !
மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது வரை தபால் வாக்குகள் எண்ணிக்கையில் ஆளும் திரிணாமுல் கட்சி 31 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 25 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தபால் வாக்கு எண்ணும் பணி துவங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அங்கு மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6, ஏப்ரல் 10, ஏப்ரல் 17, ஏப்ரல் 22, ஏப்ரல் 26, ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் பல கட்ட வாக்குப்பதிவு
தமிழ்நாடு,கேரளா,புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது.