அசாம் மாநிலத்தில் கடந்த 9-ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 126 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில், ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை, தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், 5 மாநிலங்களுக்கான வாக்குப்பதிவுகளும் இன்று நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. அசாமில் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பது குறித்த இறுதி முடிவிற்கு முன்னோட்டமாக இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்து இப்போது பார்ப்போம்.

Continues below advertisement

Axis My India நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள்

Axis My India நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின் முடிவுகளின்படி, பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என தெரிகிறது.

  • பாஜக : 88 - 100 இடங்கள்
  • காங்கிரஸ் : 24 - 36 இடங்கள்
  • மற்றவை : 0 இடங்கள்

Matrize நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள்

Matrize நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகளின்படி, அசாமில் பாஜக முந்துகிறது.

Continues below advertisement
  • பாஜக : 88 - 98 இடங்கள்
  • காங்கிரஸ் : 22 - 32 இடங்கள்
  • மற்றவை : 3 - 5 இடங்கள்

Chanakya Strategies நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள்

Chanakya Strategies நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் முடிவுகள், அசாமில் பாஜகவிற்கு சாதகமாகவே உள்ளது.

  • பாஜக : 85 - 95 இடங்கள்
  • காங்கிரஸ் : 25 - 32 இடங்கள்
  • மற்றவை : 6 - 12 இடங்கள்

Poll Diary-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Poll Diary நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, அசாமல் பாஜக ஆட்சி அமைகிறது.

  • பாஜக : 86 - 101 இடங்கள்
  • காங்கிரஸ் : 15 - 26 இடங்கள்
  • மற்றவை : 3 - 7 இடங்கள்

Poll of Polls நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள்

Poll of Polls நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் முடிவிலும், அசாமில் பாஜகவே முந்துகிறது.

  • பாஜக : 87 - 99 இடங்கள்
  • காங்கிரஸ் : 21 - 32 இடங்கள்
  • மற்றவை : 4 - 8 இடங்கள்