மேலும் அறிய

JanaNayagan Leak: சொந்த படத்தையே லீக் செய்த விஜய் டீம்? ஜனநாயகன் கசிந்தது எப்படி? யார் போட்ட கணக்கு?

JanaNayagan Leak TVK Vijay: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், ஜனநாயகன் படத்தை விஜயின் குழுவினரே வெளியிட்டதாக எதிர்தரப்பு விமர்சிக்க தொடங்கியுள்ளது.

JanaNayagan Leak TVK Vijay:  தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம், சென்சார் பிரச்னை காரணமாக வெளியாகமால் உள்ளது.

இணையத்தில் கசிந்த ஜனநாயகன்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி படம் என்ற பெரும் எதிர்பார்ப்புடன், ஜனநாயகன் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாக இருந்தது. ஆனால், சென்சார் பிரச்னை காரணமாக இதுநாள் வரை அந்த படம் எப்போது திரைக்கு வரும் என்பது உறுதியாகாமல் உள்ளது. இந்நிலையில் தான், தயாரிப்பு தரப்பையும் படக்குழுவினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக, ஒட்டுமொத்த ஜனநாயகன் திரைப்படமும் இணையத்தில் கசிந்துள்ளது. விஜயை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள் இந்த செயலை செய்துள்ளதாக அவரது ஆதரவு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். அதேநேரம், தேர்தல் பரப்புரைக்கான உள்நோக்கத்துடன் விஜயின் தரப்பே படத்தை இணையத்தில் கசியவிட்டதாக எதிர்தரப்பினர் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

விஜய் போட்ட திட்டம்:

முழு நேர அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக, எச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படத்தை அறிவித்தார். பணிகள் முழுமையாக முடிந்து வெளியீட்டிற்கு தயாராக இருந்த நிலையில் வெளியான ட்ரெய்லர், படம் அதிரடியான அரசியல் களத்தில் உருவாகி இருப்பதை உணர்த்தியது. இதனை பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வருவதன் மூலம், வசூலில் பெரிய லாபம் ஈட்டுவதோடு, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தனக்கான பரப்புரைக்கும் உதவும் என விஜய் திட்டமிட்டிருந்தார். படத்தின் போஸ்டர்களை தாண்டில் பாடல்களில் கூட அரசியல் நெடி சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால், சென்சார் பிரச்னை காரணமாகவே திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியாத சூழல் இதுநாள் வரை நீள்கிறது. இதனால் விஜய் தரப்பு சற்று கவலையிலேயே இருந்தது அனைவரும் அறிந்ததே.

ஜனநாயகன் கசிந்தது எப்படி?

தேர்தலுக்கு பிறகு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், தயாரிப்பு தரப்பை தாண்டி சென்சார் குழுவினர் மட்டுமே ஜனநாயகன் படத்தை பார்த்து இருந்தனர். ஆனால், தற்போது திரைப்படம் முழுமையாக இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தயாரிப்பு தரப்புக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடும். இதையடுத்து படத்தை கசியவிட்டது யார்? படத்தின் தரவுகள் வெளிநபர்களுக்கு கிடைத்தது எப்படி? என பல கேள்விகள் எழுந்துள்ளன.  

அரசியல் சதியா? விஜய் டீமின் ப்ளானா?

கரூர் சம்பவம், மனைவி சங்கீதா உடன் விவாகரத்து மற்றும் நடிகையுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டு போன்ற பல்வேறு விவகாரங்களால், விஜயின் அரசியல் பயணம் சற்றே வேகமிழக்க தொடங்கியது. இருப்பினும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், மாநிலம் முழுவதுமான தனது பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளார். இந்நிலையில், அவரை மனதளவில் பலவீனமாக்கும் வகையில் எதிர்தரப்பினர் தான், திட்டமிட்டு ஜனநாயகன் படத்தை கசியவிட்டதாக தவெக தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். இது அரசியல் சதி எனவும் சாடுகின்றனர்.

அதேநேரம், தனது தேர்தல் பரப்புரைக்காக ஜனநாயகன் படத்தின் காட்சிகளை பயன்படுத்துவதோடு, தனக்கான பரப்புரை ஆயுதமாகவும் உதவும் என கருதி விஜய் தரப்பே திட்டமிட்டு படத்தை கசியவிட்டதாக எதிர்தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். படக்குழு மற்றும் சென்சார் குழு மட்டுமே பார்த்த திரைப்படத்தை, வெளிநபர்களால் எப்படி கசியவிட முடியும். எனவே உள்நோக்கத்துடனேயே ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளது என, விஜயின் எதிர்தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதே உண்மை.

படக்குழு தீவிரம்..

சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படத்தின் காட்சிகளை பகிர்ந்த, சமூக வலைதள கணக்குகளை முடக்கும் பணிகளை தயாரிப்பு நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது. சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும் தயாராகி வருகிறது. படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவது மட்டுமின்றி, ஆன்லைன் அல்லது தரவிறக்கம் செய்து பார்ப்பது என்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். எனவே, சட்ட நடவடிக்கைகள் தங்கள் மீது பாய்வதை தடுக்க, பொதுமக்கள் கவனத்துடனும், பொறுப்புடனும் செயல்படுவது நல்லது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி' சகாப்தம்: மே 13-ல் பதவியேற்பு விழா... அமைச்சரவை பட்டியல் தயார் - முழு விவரம் உள்ளே!
புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி' சகாப்தம்: மே 13-ல் பதவியேற்பு விழா... அமைச்சரவை பட்டியல் தயார் - முழு விவரம் உள்ளே!
விஜய் அண்ணன், விஜய் மாமா முதலமைச்சர் ஆகிவிட்டார் திருப்பதி லட்டு பிரசாதங்களை கொடுத்த மாற்றுத்திறனாளி !
விஜய் அண்ணன், விஜய் மாமா முதலமைச்சர் ஆகிவிட்டார் திருப்பதி லட்டு பிரசாதங்களை கொடுத்த மாற்றுத்திறனாளி !
Tamil Nadu Government Formation LIVE: 7 மணிக்கு கேரளா கிளம்பும் ஆளுநர்; இழுத்தடிக்கும் திருமா; உச்சகட்ட பரபரப்பு
Tamil Nadu Government Formation LIVE: 7 மணிக்கு கேரளா கிளம்பும் ஆளுநர்; இழுத்தடிக்கும் திருமா; உச்சகட்ட பரபரப்பு
மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட டெல்லி முயற்சிக்கிறது - CPM பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி பேட்டி !
மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட டெல்லி முயற்சிக்கிறது - CPM பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி பேட்டி !
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK ADMK: கவலை வேண்டாம் CM விஜய்..! 30 MLA-க்களின் ஆதரவை இன்று அறிவிக்கும் அதிமுக - அமைச்சரவை இடம்?
TVK ADMK: கவலை வேண்டாம் CM விஜய்..! 30 MLA-க்களின் ஆதரவை இன்று அறிவிக்கும் அதிமுக - அமைச்சரவை இடம்?
CM Vijay: போட்டியே இல்லை..! CM விஜய்க்கு சட்டசபையில் கிடைத்த முதல் வெற்றி - முக்கிய பதவிகளின் அதிகாரம் என்ன?
போட்டியே இல்லை..! CM விஜய்க்கு சட்டசபையில் கிடைத்த முதல் வெற்றி - முக்கிய பதவிகளின் அதிகாரம் என்ன?
AIADMK Clash: இரண்டாக உடைந்த அதிமுக; இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்; அடுத்த நகர்வு என்ன.?
இரண்டாக உடைந்த அதிமுக; இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்; அடுத்த நகர்வு என்ன.?
AIADMK: உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!
உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!
CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!
CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!
US Iran War Netanyahu: “உள்ள புகுந்து எடுக்கணும்“; ட்ரம்ப் கூறியது என்ன.? ‘போர் முடியவில்லை‘ என எச்சரிக்கும் நெதன்யாகு.!
“உள்ள புகுந்து எடுக்கணும்“; ட்ரம்ப் கூறியது என்ன.? ‘போர் முடியவில்லை‘ என எச்சரிக்கும் நெதன்யாகு.!
வறுமையில் வளர்ந்தாரா? சுத்தப்பொய் ! பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜயின் ஸ்கூல் மேட்
வறுமையில் வளர்ந்தாரா? சுத்தப்பொய் ! பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜயின் ஸ்கூல் மேட்
Most Unsafe Cars: ஐய்யோ, இந்த பிரபலமான குடும்ப கார்கள்ல பாதுகாப்பே இல்லையா.?! அதிர்ச்சியளிக்கும் NCAP மதிப்பீடுகள்
ஐய்யோ, இந்த பிரபலமான குடும்ப கார்கள்ல பாதுகாப்பே இல்லையா.?! அதிர்ச்சியளிக்கும் NCAP மதிப்பீடுகள்
Embed widget