விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதில் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சின்னம் இல்லாமல் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட தேர்தல் நடத்தப்படுகிறது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. 



 


விழுப்புரம்:


விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 688 கிராம ஊராட்சி தலைவர், 5,088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 6,097 பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.


இதில் முதல்கட்டமாக அக்டோபர் 6 ஆம் தேதியன்று செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களுக்கும், 2 ஆம் கட்டமாக 9 ஆம் தேதி காணை, கோலியனூர், மயிலம், மரக்காணம், மேல்மலையனூர், வல்லம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 2,948 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 688 ஊராட்சிகளில் அடங்கிய 5,088 கிராம ஊராட்சி வார்டுகளுக்கான ஆண் வாக்காளர்கள் 6,87,420 பேரும், பெண் வாக்காளர்கள் 6,96,115 பேரும், மூன்றாம் பாலினத்தினர் 158 பேரும் ஆக மொத்தம் 13,83,687 வாக்காளர்கள் உள்ளனர்.


கள்ளக்குறிச்சி :


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 180 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 412 கிராம ஊராட்சி தலைவர், 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 6-ந் தேதி திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 ஒன்றியங்களிலும், 2-வது கட்டமாக அக்டோபர் 9 ஆம் தேதி கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் மற்றும் கல்வராயன்மலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 1,889 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 412 கிராம ஊராட்சிகளில் அடங்கிய 3,162 ஊராட்சி வார்டுகளில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 841 ஆண் வாக்காளர்கள், 4 லட்சத்து 77 ஆயிரத்து 887 பெண் வாக்காளர்கள், 3 ஆம் பாலினத்தவர் 186 என மொத்தம் 9 லட்சத்து 61 ஆயிரத்து 914 வாக்காளர்கள் உள்ளனர்.


 



 


இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளை தவிர பிற நாடுகளில் போட்டியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது . அதனடிப்படையில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட விபரம்: விழுப்புரம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி மொத்த எண்ணிக்கை 28:  அதிமுக சார்பில் முதல் பட்டியலில்  24  மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் வேட்பாளர்கள் மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளனர். 


விழுப்புரம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி முதல் பட்டியல்:



  1.  தாரணி எய்யில் கிராமம், மேல்மலையனூர்

  2.  செல்லம்மாள் மேல்மலையனூர்

  3.  கு. விநாயகமூர்த்தி, வல்லம், வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் வார்டு உறுப்பினர்

  4.  ஆனந்தி அண்ணாதுரை, வல்லம், செஞ்சி தாலுக்கா

  5.  சத்தியா செந்தில்குமார், அவ்வையார்குப்பம், மயிலம் ஒன்றியம்

  6.  அருள்முருகன் அவர்கள் கிளைக் கழகச் செயலாளர், பாதிராப்புலியூர்,

  7.  மகாலட்சுமி பன்னீர், ஆத்திப்பாக்கம், ஒலக்கூர் ஒன்றியம்

  8.  சிவகாமி நடராஜன், பனையூர், ஒலக்கூர் ஒன்றியம்

  9.  சரசு, முளச்சூர்

  10. மைதிலி கோவிந்தசாமி, தடாகம், செஞ்சி ஒன்றியம்

  11. க. சோழன், செஞ்சி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் வார்டு உறுப்பினர், கோணை

  12.  பழனிசாமி, முகையூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர், கள்ளக்குறிச்சி மாவட்டம்

  13. M. தனபால்ராஜ், முகையூர் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர், கள்ளக்குறிச்சி மாவட்டம்

  14.  சி. ராஜா, பெரும்பாக்கம், காணை ஒன்றியம்

  15.  சரவணகுமார் தென்பேர், டி. புதுப்பாளையம் அஞ்சல்

  16.  வசந்தி ஜோதி ராஜா, பனையபுரம், விக்கிரவாண்டி ஒன்றியம்

  17.  சரண்யா பக்தவச்சலம், ஆதனபட்டு, வானூர் ஒன்றியம்

  18.  சந்தியா, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர், பேராவூர்

  19.  வெற்றிவேந்தன், நெமிலி

  20. பிரேமா, நல்லாசன்பேட்டை

  21. அருணா எம்.எஸ். அழகேசன், மாகதபுரம்

  22. இராம. ஏகாம்பரம் , திருவெண்ணெய்நல்லூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலார் கள்ளக்குறிச்சி மாவட்டம்

  23. K. குமுதா மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் வார்டு உறுப்பினர், கண்டமங்கலம்

  24. நித்தியகல்யாணி ராமமூர்த்தி, பள்ளிநேலியனூர்