நாடு முழுவதும் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த 5 மாநிலங்களிலும் ஏபிபி நாடு மற்றும் சி வோட்டர் இணைந்து கடந்தாண்டு முதல் கருத்துக்கணிப்பை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேசம் :
நாட்டின் அதிக சட்டசபை தொகுதிகளை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை தக்கவைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாத கருத்துக்கணிப்பின்படி உத்தபிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 403 இடங்களில் 225 இடங்களில் இருந்து 237 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது.
சமாஜ்வாதி கூட்டணி 139 இடங்களில் இருந்து 151 இடங்கள் வரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகுஜன்சமாஜ்வாதி கட்சி 13 இடங்களில் இருந்து 21 இடங்கள் வரை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளில் தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் 4 இடங்களில் இருந்து 8 இடங்கள் வரை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. பா.ஜ.க. கூட்டணி 41.2 சதவீத வாக்குகளை கைப்பற்றும் என்றும், சமாஜ்வாதி 35 சதவீத வாக்குகளும், பகுஜன் சமாஜ்வாதி 14.2 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 7 சதவீத வாக்குகளும் பிற கட்சிகள் 2.6 சதவீத வாக்குகளும் பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரியவந்துள்ளது.
பஞ்சாப் :
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 இடங்களை கைப்பற்ற ஆம் ஆத்மி இடையேயும், காங்கிரஸ் இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது. பிப்ரவரி மாத கருத்துக்கணிப்பின்படி, ஆளுங்கட்சியான காங்கிரஸ் 24 முதல் 30 இடங்களையும், எதிர்க்கட்சியான சிரோமணி அகாலிதளம் 20 முதல் 26 இடங்களையும் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. ஆம் ஆத்மி கட்சி 55 முதல் 63 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 3 முதல் 11 இடங்களையும், பிற கட்சிகளையும் 2 இடங்களை கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் 30 சதவீத வாக்குகளையும், சிரோமணி அகாலிதளமம் 20.2 சதவீதத்தையும், ஆம் ஆத்மி 39.8 சதவீதத்தையும், பா.ஜ.க. 8 சதவீதத்தையும், பிற கட்சிகள் 2 சதவீத வாக்குகளையும் கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் :
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சிக்கும், ஆட்சியை பிடிப்பதற்கு பா.ஜ.க.விற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பிப்ரவரி மாத கருத்துக்கணிப்பின்படி, உத்தரகாண்டில் மொத்தமுள்ள 70 இடங்களில் காங்கிரஸ் 30 முதல் 36 இடங்களையும், பா.ஜ.க. 31 முதல் 37 இடங்களையும், ஆம் ஆத்மி 4 இடங்களையும் கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
பிற கட்சிகள் 1 இடத்தை பிடிக்கும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது. உத்தரகாண்டில் வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 40.6 சதவீத வாக்குகளையும், பா.ஜ.க. 42.6 சதவீத வாக்குகளையும், ஆம் ஆத்மி 13 சதவீத வாக்குகளையும், பிற கட்சிகள் 3.9 சதவீத வாக்குகளையும் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கோவா :
கோவா மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரசும், பா.ஜ.க.வும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிப்ரவரி மாத கருத்துக்கணிப்பின்படி, 10 முதல் 14 இடங்களை காங்கிரஸ் கூட்டணி கட்சி கைப்பற்றும் என்றும், பா.ஜ.க. கூட்டணி 14 முதல் 18 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி 4 முதல் 8 இடங்களையும், மகாராஷ்ட்ராவாதி கோமன்டக் கட்சி 3 முதல் 7 இடங்களையும் கைப்பற்றும் என்றும், பிற கட்சிகள் 2 இடங்களை பிடிக்கும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகிறது. கோவாவில் காங்கிரஸ் கூட்டணி 23.6 சதவீத வாக்குகளையும், பா.ஜ.க. கூட்டணி 30 சதவீத வாக்குகளையும், ஆம் ஆத்மி கூட்டணி 24 சதவீத வாக்குகளையும், மகராஷ்ட்ராவாதி கோமன்டக் கட்சி 7.7 சதவீத வாக்குகளையும், பிற கட்சியினர் 14.7 சதவீத வாக்குகளையும் கைப்பற்றுவார்கள் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்