உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 10,14,20, 23, 27 ஆகிய தேதிகளிலும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 10ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.
இந்நிலையில் இந்தத் தேர்தல் தொடர்பாக ஏபிபி மற்றும் சி-வோட்டர் ஆகியவை இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை செய்துள்ளது. அந்தக் கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் 55 இடங்களையும், பாஜக கூட்டணி 324இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களையும் சுயேட்சைகள் 5 இடங்களிலும் வென்று இருந்தனர்.
2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 4 முதல் 8 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 228 முதல் 244 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. சமாஜ்வாதி கட்சி 132 முதல் 148 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சி 13 முதல் 21 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சுயேட்சைகள் 2 முதல் 6 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது பாஜகவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
ABP Cvoter Exit Poll 2022 LIVE: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் உடனுக்குடன்..
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சி 4 முதல் 8 வரை இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. பாஜக 225 முதல் 237 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. சமாஜ்வாதி கட்சி 139 முதல் 151 இடங்கள் வரையும், பகுஜன் சமாஜ் கட்சி 13 முதல் 21 இடங்களும், சுயேட்சைகள் 2 முதல் 6 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு என்று கணிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் தற்போது சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்