ஓசூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்து பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை  எடுத்துள்ளனர். 


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது பெங்களூரில் இருந்து ஓசூர் நோக்கி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்க் கொண்ட போது அதில் 15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


69 பெட்டிகளில் கொண்டுவரப்பட்ட தங்க நகைகளில் 45 பாக்ஸுகளில் கொண்டுவரப்பட்ட தங்க நகைகளுக்கு மட்டும் ஆவணங்கள் வைத்திருந்ததாக தெரிகிறது. ஆனால் 24 பாக்ஸுகளுக்கு ஆவணங்கள் இல்லாமல் முன்னுக்குப் பின் முரணான பதிலால் நகைகள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் பிரபல டைட்டான் தனியார் தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.


உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட நகைப் பெட்டிகள் ஓசூர் சார் ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான செல்வி பிரியங்கா மூலம் பெறப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.