2023- 24ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு எப்போது நடைபெறும் என்ற அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


சமக்ர சிக்‌ஷா மாநிலத் திட்ட இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி, டிசம்பர் மாதம் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது.


குறிப்பாக 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு தொடங்கி நடைபெறுகிறது. 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 11 முதல் 21ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது.


2 வினாத் தாள்கள்


6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 செட் வினாத் தாள்கள் தயார் செய்யப்பட உள்ளன. அவை தேர்வுக்கு முந்தைய நாள் மதியம் 2 மணிக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. இதற்கான வினாத் தாள்களையும் கால அட்டவணையையும் எஸ்சிஇஆர்டி எனப்படும் மாநிலக் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கி உள்ளது.


இதன்படி, 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி மொழித்தாளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. டிசம்பர் 12ஆம் தேதி விருப்ப மொழிப் பாடத்துக்கான தேர்வு நடக்கிறது. டிசம்பர் 13ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத்துக்கான தேர்வு நடக்கிறது. டிசம்பர் 15ஆம் தேதி அறிவியல் பாடத்துக்கான தேர்வும் டிசம்பர் 18ஆம் தேதி கணிதப் பாடத்துக்கான தேர்வும் நடைபெற உள்ளது.



யார் யாருக்கெல்லாம் தேர்வு?


தொடர்ந்து டிசம்பர் 20ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வும் டிசம்பர் 21ஆம் தேதி உடற்கல்வி பாடத்துக்கான தேர்வும் நடைபெற உள்ளதாக எஸ்சிஇஆர்டி தெரிவித்துள்ளது. 2023- 24ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தில் படிக்கும் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த அட்டவணையின்படி தேர்வுகள் நடைபெற உள்ளன. 


ஆண்டு இறுதித் தேர்வு எப்போது?


10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மார்ச் 26ஆம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் 28ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெற உள்ளது.


முழுமையாக வாசிக்க: 10th Public Exam Time Table: மார்ச் 26 - ஏப்.8: 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது?- தேதிவாரியாக முழு அட்டவணை! 


பிளஸ் 2 தேர்வு தேதிகள்


12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மார்ச் 1ஆம் தேதி தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 5ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் 8ஆம் தேதி பல்வேறு வகையான பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.


முழுமையாக வாசிக்க: 12th Public Exam Time Table: மார்ச் 1 முதல் 22 வரை: பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் இவைதான்- அட்டவணையோடு!